இராணுவ மயமாக்கலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியது சிங்களவர்களின் கடமை.

23.12.13

வடக்கிலுள்ள தமிழ் மக்கள் சிங்களவர்களை எதிர்க்கவில்லை, வடக்கு,கிழக்கு

நேற்று முன்தினம் நடந்த சர்வோதய இயக்கத்தின் ஆண்டு விழாவில் உரையாற்றிய அவர்,

“வடக்கில் இராணுவத் தலையீட்டுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியது தெற்கிலுள்ள சிங்கள மக்களின் கடமை.

உள்நோக்கங்களுடன் தான் வடக்கில் சிறிலங்கா இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர் என்பதில் எமக்கு எந்த சந்தேகமும் இல்லை.

எமது நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. எமது வர்த்தகம் அபகரிக்கப்பட்டுள்ளது. எமது தொழில்வாய்ப்புகள் அபகரிக்கப்பட்டுள்ளன.

எவ்வளவு காலத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் தமது படைகளை வடக்கில் வைத்திருக்கப் போகிறது.?

இந்தக் கேள்வி தெற்கிலுள்ள நியாயமான, மனிதாபிமானமுள்ள, சாதாரண சிங்கள மக்கள் எழுப்ப வேண்டும். இது அவர்களின் கடமை.

சிங்களவர்கள் வடக்கிற்கு வருவதை நான் எதிர்க்கவில்லை.

பல முறை ஊடகங்களால் எனது கருத்துகள் திரித்து வெளியிடப்பட்டுள்ளன.

எமக்கு ஒரு சிவில் ஆளுனர் தேவை என்று நான் கூறினால், நான் ஆளுனரை வெளியேற்ற முனைவதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன.

எனது மகனுக்கு தயவு செய்து ஒரு கணித ஆசிரியர் மூலம் கணிதம் கற்பியுங்கள், இரசாயனவியல் ஆசிரியரைக் கொண்டு அதைச் செய்யாதீர்கள் என்று கூறினால், அது இரசாயனவியல் ஆசிரியருக்கு எதிரான கருத்தாக முடியாது.

அதுபோலத்தான் இராணுவ ஆளுனர் வேண்டாம், சிவிலியன் ஆளுனரை நியமியுங்கள் என்று கேட்கிறேன்.

இராணுவத்தினரை வெளியேறும்படி கேட்பதால், சிங்களவர்கள் வடக்கிற்கு வரக்கூடாது என்பது எனது நிலைப்பாடு அல்ல” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிங்கள மயப்படுத்தப்படுவதையே எதிர்க்கிறார்கள் என்று வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :