வலிகளுக்கு மத்தியில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவி.

21.12.13

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இராமநாதபுரம் மகாவித்தியாலையத்தில் உயர்தரக் கல்வி கற்று வந்த பிரதா தெய்வேந்திரம்பிள்ளை என்ற மாணவி க. பொ. த உயர்தரப் பரீட்சையில் அதிக பெபேறுகளைப் பெற்று மாவட்ட ரீதியாக முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டதோடு தான் கல்வி கற்று வந்த பாடசாலைக்கும், அறிவையூட்டிய ஆசிரியர்களுக்கும் பெருமையையும் சிறப்பையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட மாணவியின் தாயார் இவரின் ஒரு வயதிலேயே இறந்து விட சிறியதாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த இவருக்கு இரண்டு மூத்த ஆண் சகோதர்கள் மாவீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் கற்க முடியாத சூழ்நிலையில் இடை நிறுத்தப்பட்ட இவரின் படிப்பு பின் பல இடப்பெயர்வுகளுக்கு மத்தியிலும் கல்வியைத் தொடர முடியாமலேயே போனது.

இதனால் இவர் அந்த ஆண்டிற்குரிய பத்தாம் தரத்தினை படிக்க முடியாமலே போய் விட்டது. இருந்தும் மனம் தளராத இம் மாணவி பல துன்பங்களுக்கு மத்தியில் எப்படியாவது படித்தே தீரவேண்டும் என்ற இலட்சியக் கனவுகளோடு தவற விட்ட அடுத்த ஆண்டில் பதினோராம் தரத்தில் சேர்ந்து கற்காமல் போன பத்தாம் தரத்தையும் சேர்த்தே பல வலிகளுக்கு மத்தியில் கற்கத் தொடங்கி நடந்து முடிந்த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகள் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடம் பிடித்திருப்பது இவரின் கடின உழைப்பையும், தமிழ் மாணவர்களின் கல்வி கற்கும் திறனையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

எத்தனை துன்பங்கள் எம்மைத் துளைத்தெடுத்தாலும், நாம் கல்வியிலும் சளைத்தவர்களல்ல என்பதை அதிக பெறுபேறுகள் பெற்று நிரூபித்துள்ளார் மேற்குறிப்பிட்ட மாணவியான பிரதா அவர்கள்.
பிரதா தெய்வேந்திரம்பிள்ளை பெற்ற பெறுபேறுகள் விபரம்..

புள்ளி விபரவியல் – A

கணக்கீடு – A

பொருளியல் – B

பல வலிகளுக்கு மத்தியில் கல்வியினைக் கற்று உயர்தரப் பரீட்சையில் மாவட்ட ரீதியாக கிளிநொச்சி மாவட்டத்தில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்ட மாணவி பிரதாவை பாராட்டுவதோடு மட்டுமல்லாமல், பல்கலைக்கழகம் சென்ற பின்னரும் மென்மேலும் கல்வியில் சிறந்து பல துறைகளைக் கற்று வளர்ந்து வருகின்ற தமிழர் தேசத்தில் சிறந்த சிற்பிகளாக உயர வேண்டும்.

0 கருத்துக்கள் :