விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீடுகள் அரசுடமையாக்கப்படும்!

2.12.13

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வல்வெட்டித்துறை மற்றும் வன்னியில் உள்ள இரண்டு வீடுகள் உட்பட போர் காரணமாக வெளிநாடுகளுக்கு சென்று அங்கு வசித்து வரும் அதிகளவானவர்களின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது. வல்வெட்டித்துறை மற்றும் வன்னியில் அமைந்துள்ள பிரபாகரனின் இரண்டு வீடுகளை அரசுடமையாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

போர் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் வடக்கு மக்களின் சொத்துக்களும் இவ்வாறு அரசுடமையாக்கப்பட உள்ளன. அண்மையில் குடிசன மதிப்பீட்டு திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்ட கணக்கெடுப்பின் போது பிரபாகரனினால் பயன்படுத்தப்பட்ட இரண்டு வீடுகள் உள்ளிட்ட பல சொத்துக்கள் உரிமை கோரப்படாத நிலையில் காணப்படுகின்றன. பிரபாகரனின் சொத்துக்களுக்கு உரிமை கோர அவரது குடும்பத்தைச் சேர்ந்த எவரும் உயிரோடு இல்லாத காரணத்தினால் இவ்வாறு சொத்துக்கள் அரசுமையாக்கப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 1982ம் ஆண்டின் பின்னர் போர் காரணமாக ஏற்பட்ட சொத்து மற்றும் உயிர்ச் சேதங்கள் தொடர்பிலான கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

  போர் காரணமாக முழுமையாக நாட்டை விட்டு வெளியேறி வாழ்ந்து வரும் மக்களின் சொத்துக்களும் இவ்வாறு அரசுடமையாக்கப்பட உள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீடுகள் அரசுடமையாக்கப்படும்! விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வல்வெட்டித்துறை மற்றும் வன்னியில் உள்ள இரண்டு வீடுகள் உட்பட போர் காரணமாக வெளிநாடுகளுக்கு சென்று அங்கு வசித்து வரும் அதிகளவானவர்களின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது. யுத்தம் காரணமாக மக்களுக்கு ஏற்பட்ட சொத்து சேதங்கள் தொடர்பாக சரியான தகவல்களை கண்டறிவதற்காக இலங்கை புள்ளிவிபரத் திணைக்களம் ஆரம்பித்துள்ள கண்கெடுப்பில் பிரபாகரனின் வீடுகள் உட்பட உரிமை பாராட்ட எவரும் இல்லாத அதிகளவானவர்களின் சொத்துக்களை கணக்கெடுப்பில் சேர்ப்பதில்லை என திணைக்களத்தின் பணிப்பாளர் தீர்மானித்துள்ளார்.

பிரபாகனின் வீடுகளுக்கு உரிமை கோர அவரது குடும்பத்தில் எவரும் உயிரோடு இல்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் டி.சீ.ஏ. குணவர்தன குறிப்பிட்டுள்ளார். 1982 ம் ஆண்டுக்கு பின்னர் யுத்தம் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்து விபரங்கள் தொடர்பில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. புலிகளின் தலைவருக்கு இரண்டு வீடுகள் உள்ளன. முதலாவது வீடு யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையிலும் இரண்டாவது வீடு வன்னியிலும் இருக்கின்றன. பிரபாகரனின் தந்தையும் தாயும் முதலாவது வீட்டில் 80ம் ஆண்டின் ஆரம்பகாலத்தில் வசித்து வந்தனர். யுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து சென்றனர். 2002- 2004 ஆம் ஆண்டு சமாதான பேச்சுவார்த்தை நடந்த காலத்தில் அவர்கள் மீண்டும் இலங்கை திரும்பினர். எனினும் முதலாவது வீட்டில் எவரும் வசிக்கவில்லை.

  அதேவேளை பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் வன்னியில் பாதுகாப்பான வீடுகளில் அவ்வப்போது வசித்து வந்துள்ளனர். அத்துடன் யுத்தம் காரணமாக இலங்கையில் இருந்து வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளவர்கள் வீடுகள் மற்றும் காணி கணக்கெடுப்பில் சேர்க்கப்பட மாட்டாது எனவும் குணவர்தன கூறியுள்ளார். போர் காரணமாக இலங்கையில் வடக்கில் இருந்து 10 முதல் 11 லட்சம் பேர் இலங்கையில் இருந்து வெளியேறி வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் வீடுகளை விடுதலைப் புலிகள் பயன்படுத்தி வந்ததுடன் பின்னர் இராணுவத்தினர் அவற்றை கைப்பற்றி பயன்படுத்தி வருகின்றனர்.

0 கருத்துக்கள் :