ஈழத்தமிழர் தமிழகத்துக்குள் போராளிகளா?!பொலிஸார் தேடுதல்

16.12.13

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வந்ததாக கூறப்படும் தமிழ் அகதிகள் பலரை தேடி தமிழகத்தில் தேடுதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சாந்தன் என்ற இலங்கை அகதி ஒருவர் தனுஸ்கோடிக்கு அருகில் உள்ள அரிச்சல்முனை பகுதியில் நேற்று கைதுசெய்யப்பட்ட பின்னரே இந்த தேடுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தாம், தமிழகத்துக்கு வந்த படகில் பலர் தம்முடன் பயணித்ததாக சாந்தன் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
எனினும் அவர்கள் எங்கேயிருக்கிறார்கள் என்பது தமக்கு தெரியாது என்றும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்தநிலையி;ல் படகில் வந்த ஏனையோர் போராளிகளாக இருப்பார்களா? என்ற சந்தேகம் தமிழக பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :