இலங்கைக்கு ஐ.நா பிரதிநிதிகள் விஜயம் செய்ய அரசு கூடுதல் சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்

10.12.13

ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய அரசாங்கம் கூடுதல் சந்தர்ப்பம் அளிக்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அந்தக் கோரிக்கைக்கு கூடுதல் சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமெனவும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர், ஐக்கிய நாடுகள் இடம்பெயர் மக்களுக்கான பிரதிநிதி போன்றோரின் இலங்கை விஜயங்கள் வரவேற்கப்பட வேண்டியவை என தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகளை அதிகளவில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அரசாங்கம் அழைப்பு விடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளது. சட்டவிரோத கடத்தல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதியின் நிலுவையில் உள்ள விஜயம் உள்ளிட்ட ஏனைய நிலுவையில் உள்ள ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகளின் இலங்கை விஜயக் கோரிக்கைகளுக்கு அனுமதியளிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

யுத்தத்தின் பின்னரான பௌதீக புனர்நிர்மாணப் பணிகளில் இலங்கை முன்னேற்றம் அடைந்துள்ளமை வரவேற்கப்பட வேண்டியவை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. நிலக்கண்ணி வெடி அகழ்வு மற்றும் வீட்டு நிர்மாணம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உதவிகளை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டல், ஜனநாயகத்தை மேம்படுத்தல் உள்ளிட்ட காரணிகளில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென தெரிவித்துள்ளது. சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட இலங்கை முனைப்பு காட்ட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது.

0 கருத்துக்கள் :