மன்மோகன் விரைவில் வடக்கிற்கு விஜயம்!

1.12.13

இந்திய பிரதமர் மன்மோகன்சிங் விரைவில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்படுகிறது.  நேற்று சென்னையில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் பி.சிதம்பரம் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொது நலவாய நாடுகளின் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துக் கொள்ளாமல் இலங்கைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருந்தார்.

எனினும் வடமாகாணத்திற்கு புதிதாக தெரிவான முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மன்மோகன் சிங்கை யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளுமாறு விடுத்திருந்த அழைப்பு இன்னும் திறந்த அழைப்பாகவே உள்ளது.

இந்த நிலையில் வடமாகாணத்தின் நிலமைகளை பார்வையிடுவதற்காகவும், முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்திப்பதற்காகவும், இந்திய பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்வார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :