தமிழ் அரசியல்வாதிகள் 17 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசாங்கம் முடிவு

7.12.13

தமிழ் அரசியல்வாதிகள் 17 பேருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை  செய்துள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்தில் புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளுடன் இணைந்து இரசியமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக குற்றம் சுமத்திய அவர்களுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
சிரேஷ்ட படை அதிகாரிகள், புலனாய்வு சேவைகளின் அதிகாரிகள் பலரின் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான கலந்துரையாடலின் போது, தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் தொடர்பிலான ஆபத்து பற்றி அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் புதிய சட்டத் திட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் விடுதலைப் புலிகளுக்கு உயிரூட்ட முயற்சிக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக அமுலில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியிருப்பதாக அரசாங்கத்தின் உயர் மட்ட வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.
புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான பெருந் தொகை பணம் சுவிஸ் வங்கியொன்றில் இருப்பதாகவும் அந்த பணத்தை பயன்படுத்தி புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் புலனாய்வுப் பிரிவினருக்கு தெரியவந்துள்ளது சிங்கள வார இதழ் ஒன்று கூறியுள்ளது.

புலிகளுக்கு உயிரூட்ட முயற்சித்து வரும் தமிழ் அரசியல்வாதிகள் கடந்த காலங்களில் கனடா, சுவிஸர்லாந்து, பிரித்தானியா, நோர்வே போன்ற நாடுகளுக்கு சென்று அந்நாடுகளில் உள்ள புலிகளின் பிரதிநிதிகளுடன் ரகசியமான பேச்சுக்களை நடத்தியிருப்பதாக தெரியவந்துள்ளது என்றும் இந்த வார இதழ் குறிப்பிட்டுள்ளது.

0 கருத்துக்கள் :