கொமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவதே தவறு.மதுரை ஆதீனம்

5.11.13

இனப்படுகொலை நடத்திய இலங்கையில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்த முடிவு செய்ததே மிகப் பெரிய தவறு என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

இனப்படுகொலை நடத்திய இலங்கையில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்த வேண்டும் என முடிவு செய்ததே மிகப்பெரிய தவறு. அப்படிப்பட்ட முடிவுக்கு இந்தியா சம்மதம் தெரிவித்திருக்கக் கூடாது.
லட்சக்கணக்கான மனிதர்களை கொன்று குவித்து, பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அழித்து மனிதாபிமானத்திற்கு வேட்டு வைத்த இலங்கையில், கொமன்வெல்த் மாநாட்டை நடத்தலாமா?
சின்னஞ்சிறு பாலகன் பிரபாகரனின் மகனை ஈவு இரக்கமின்றி கொலை செய்த இலங்கையில் கொமன்வெல்த் மாநாடு தேவையா?இசைப்பிரியாவை மிகப்பயங்கரமாக கொலை செய்து விட்டு, நாங்கள் இக்கொலையை செய்யவில்லை என பொய்ப்பிரசாரம் மேற்கொள்ளும் இலங்கையில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்தலாமா?
கொமன்வெல்த் என்ற சொல்லுக்கு பொது சொத்து என்று தான் பொருள். அப்படிப்பட்ட இறைவனின் பிள்ளைகளான மனித உயிர்கள் என்ற பொதுச் சொத்தை நாசமாக்கிய இலங்கையில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்த அனுமதிக்கலாமா?
மத்திய அரசே, இலங்கை கொமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

0 கருத்துக்கள் :