இசைப்பிரியா வீடியோ தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

1.11.13

விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் பிடித்துச் சென்று கொலை செய்ததற்கான வீடியோ ஆதாரத்தை சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

 இந்த காட்சியைப் பார்த்த பல்வேறு தலைவர்கள், இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் கொடூரமான போர்க்குற்றத்தில் ஈடுபட்ட  இலங்கையை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை வந்த மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி ஜெயந்தி நடராஜனிடம், இசைப்பிரியா தொடர்பான வீடியோ பற்றி நிருபர்கள் கேட்டனர்.

 இதற்குப்பதில் அளித்த ஜெயந்தி நடராஜன், “இசைப்பிரியா பற்றிய வீடியோ உண்மை எனில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என்பதே எனது கருத்து. தமிழர்களின் உணர்வுகளுக்கு பிரதமர் மதிப்பளிப்பார்” என்று தெரிவித்தார்.

1 கருத்துக்கள் :

ஆமாம் .இந்த சேனல் 4 தொலைக்காட்சி ஏன் தவனை முறையில் முக்கியமான தருனங்களில் இந்த காட்சிகளை வெளியிட வேண்டும்.?