மாநாட்டில் மன்மோகன் பங்கேற்கா விட்டால் தமிழர்களுக்கு என்ன நன்மை?

8.11.13

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் பிரதமர் பங்கேற்க செய்வதே நல்லது என எம்.பி.கண்ணன் கூறியுள்ளார்.
புதுச்சேரி ராஜ்யசபா உறுப்பினர் ப.கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்பது என்று முடிவு எடுத்தால் அதில் பிரதமர் பங்கேற்க செய்வதே நல்லது.

தமிழக மக்களின் ஏகோபித்த உணர்வுக்கு மதிப்பு அளித்து முடிவு எடுக்க வேண்டும். பிரதமர் பங்கேற்கவில்லை என்றால் இலங்கையில் வாழும் தமிழர்களின் பிரச்சனைகளுக்கு எப்படி குரல் கொடுக்க முடியும்.
இலங்கையில் வாழும் தமிழர்கள் சிங்களர்களுக்கு இணையான சம உரிமையுடன், வாழ வேண்டும் என்பதுதான் சீமான், கோமான் உள்ளிட்ட அனைவரின் கோரிக்கை.

இலங்கை வடக்கு மாகாணத்தில் ஏகோபித்த தமிழர்களால் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட விக்னேஸ்வரன் இலங்கைக்கு இந்தியா வரக்கூடாது என்றால் இந்தியா பங்கேற்கக் கூடாது.
வரவேண்டும் என்றால் பங்கேற்க வேண்டும். இங்கிருந்து கொண்டு இலங்கை தமிழர்களுக்கு குரல் மட்டும் கொடுப்பதால் அங்குள்ள தமிழர்களின் வாழ்வு சிறப்படையாது.

இலங்கை பிரச்சனையை தீர்த்து வைப்பதே நமது நோக்கம், இலங்கை தமிழர்களை கை கழுவி விடுவது நமது நோக்கம் அல்ல. பிரதமர் பங்கேற்கவில்லை என்றால் இலங்கை தமிழர்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று கூறினால் இப்போதே நான் பிரதமரை பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்துவேன்” என்றார்.

0 கருத்துக்கள் :