நினைவு முற்றம் திறப்பு பழ.நெடுமாறன்–வைகோ கலந்து கொண்டனர்

8.11.13

தஞ்சையில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவில் பழ.நெடுமாறன், வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்
கடந்த 2009–ம் ஆண்டு இலங்கையில் நடந்த போரில் ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதன் இறுதிகட்ட போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக தஞ்சையை அடுத்த விளார் கிராமம் பைபாஸ் ரோடு அருகே உலக தமிழர் பேரமைப்பு சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் 2½ ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு உள்ளது.
அதன் திறப்பு விழா கடந்த 6–ந் தேதி நடந்தது. விழாவை முன்னிட்டு அதன் தொடர் நிகழ்ச்சிகள் நேற்று மாலை நடந்தது. விழாவிற்கு புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் தலைமை தாங்கினார். திறப்பு நிகழ்ச்சிக்குழு தலைவர் அய்யனாபுரம் முருகேசன் வரவேற்றார். விழாவை காசிஆனந்தன் தொடங்கி வைத்தார்.

பழ.நெடுமாறன்–வைகோ

விழாவில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக பா.ஜ.க. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன், வக்கீல் தஞ்சை அ.ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில துணை செயலாளர் சி.மகேந்திரன், தமிழ்த் தேச பொதுவுடமை கட்சி பொதுச்செயலாளர் பெ.மணியரசன், டாக்டர் அ.தாயப்பன், சுப.உதயகுமார், இரா.இளவரசு உள்பட பலர் பேசினர். முடிவில் உலக தமிழர் பேரமைப்பு அறக்கட்டளை பொருளாளர் இளவழகன் நன்றி கூறினார்.
விழா தொடர்ந்து இன்றும், நாளையும் நடக்கிறது.

0 கருத்துக்கள் :