மாவீரர்களுக்கு அஞ்சலி செய்ய தமிழருக்கு உரிமையுண்டு . விக்கிரமபாகு

24.11.13

தமிழர்களின் உரிமைக்காகப் போராடிய மாவீரர்களை நினைவு கூர்ந்து கார்த்திகை 27 ஆம் திகதி சுடர் ஏற்றி அஞ்சலிப்பதற்கான உரிமை தமிழர்களுக்கு இருக்கின்றது.

அதற்குத் தடைவிதிப்பதானது அடிப்படை மனித உரிமை மீறலாகும் என்று நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரும், தெஹிவளை - கல்கிஸை மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன  நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:


நானும் மாவீரர் தின நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கின்றேன். இதனால் என்னைக் கொலை செய்வதற்குகூட முயற்சித்தனர். குறிப்பாக ரோஹண விஜேவீரவுக்கு அரசுக்கு எதிரான "கிளர்ச்சியாளர்'' என்ற முத்திரையை குத்தியுள்ள நிலையில், ஜே.வி.பியினர் தெற்கில் வீரர்கள் தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இதற்குத் தடையில்லை.

பிரபாகரன் உள்ளிட்ட புலிகளையும் அரசு அந்தக் கோணத்தில் பார்த்தாலும், அவர்களை  தமிழர்கள் மாவீரர்களாகவே கருதுகின்றனர்.


எனவே, புலிகளை தமிழர்கள் மாவீரர்கள் என கருதினால் அவர்களை அனுஷ்டிப்பதற்கான உரிமை தமிழர்களுக்கு இருக்கின்றது. மாவீரர்கள் என கருதப்படுபவர்களை நினைவுகூரும் உரிமை அனைத்து இனங்களுக்கும் இருக்கின்றது என்றும் அவர் கூறினார்.

0 கருத்துக்கள் :