மாவீரர்களின் நினைவு வாரம் இன்று முதல் ஆரம்பம்

21.11.13

தாயக விடுதலைக்காகப் போராடி மடிந்த மாவீரர்களின் நினைவு வாரம் இன்று முதல் அனுஷ்டிக்கப்படுகிறது. மாவீரர் நாளை நினைவுகூருவதற்கு புலம்பெயர் தேசங்களில் பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகளினால், தாயக விடுதலைப் போராட்டத்தில் வித்தாகிப் போன மாவீரரகளுக்காக ஆண்டுதோறும் காரத்திகை மாதம் 20 ஆம் நாள் முதல் 27 ஆம் நாள் வரையில் மாவீரர வாரம் நினைவுகூரப்பட்டு வருகின்றது.

கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப் பகுதி வரையில் ஈழத்திலும், புலத்திலும் மாவீரர் வாரம் நினைவுகூரப்பட்டது. ஆனால் ஈழத்தில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் புலம் பெயர் தேசங்களில் மாத்திரமே மாவீரர் வாரம் நினைவுகூரப்பட்டு வருகின்றது.

புலம் பெயர்த் தமிழரகள் வாழும், பிரிட்டன், ஆஸ்திரேலியா, சுவிஸ், கனடா ஆகிய நாடுகளில் பெரும் உணரவுபூர்வமான எழுச்சியுடன் இன்று மாவீரரநாள் நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன.

0 கருத்துக்கள் :