சுவிசிலும் லண்டனிலும் மக்கள் முன் உறுதிபூண்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தி​ன் மக்கள் பிரதிநிதிக​ள் !

11.11.13

ஈழத்தமிழ் மக்களின் அடிப்படை அரசில் பெருவிருப்பின் சனநாயகப் பேராட்ட வடிவமாக திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராண்டாம் தவணை அரசவைக்கு தேர்வாக மக்கள் பிரதிநிதிகள், மக்கள் முன்னாலான அறிமுக நிகழ்வுகள் புலம்பெயர் நாடுகளில் இடம்பெற்று வருகின்றன. அதனொரு அங்கமாக லண்டனிலும் சுவிசிலும் தேர்வாகிய மக்கள் பிரதிநிதிகள், தேர்தல் ஆணையத்தின் உத்தியோகபூர்வ பத்திரத்தினை மக்கள் முன் பெற்றுக் கொண்டதோடு, தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கான தங்களின் உறுதிப்பாட்டினை மக்கள் முன் வெளிப்படுத்தி நின்றனர்.

தேர்வாகியுள்ள பிரதிநிதிகளை வரவேற்று அவர்களுக்கு உறுதுணையாக நின்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை வலுப்படுத்துமாறு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், சுவிஸ் நிகழ்வில் இணைவழிப் பரிவர்தனையூடாக இணைந்து கொண்டு மக்களிடம் கோரியிருந்தார்.

இதேவேளை இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு நிகழ்ந்தது இனப்படுகொலையே என்பதனை அனைத்துல அரங்கில் நிறுவுவதுதான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதான செயற்பாடெனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்திருந்தார்.சுவிஸ் மக்கள் பிரதிநிதிகள் : திரு. சதாசிவம் ஜெகசீலன் ,திரு. மார்க்கண்டு தேவராஜா ,திரு. செல்வராஜா ஜெயம், திரு. இராஜதுரை செந்தில்குமாரன் ,திரு. புவனேந்திரன் மோகனராஜ் ,திரு. முருகையா சுகிந்தன் ,திருமதி. ரஜினிதேவி செல்லத்துரை ,திரு. கஜந்தன் கனகசுந்தரம் ,திரு. அருளானந்தம் தெய்வேந்திரன் பிரித்தானிய மக்கள் பிரதிநிதிகள் : திரு. மோகன் தியாகராஜா, திரு. ருத்திராபதி சேகர் ,திரு. அம்பலவாணர் அகிலவாணர் , திரு. தில்லை நடராஜா, திரு. வன்னியசிங்கம் குணசீலன் , திரு. கந்தப்பு ஆறுமுகம் , திரு. மணிவண்ணன் பத்மநாபன் , திரு. சொக்கலிங்கம் யோகலிங்கம் , திருமதி. வாசுகி முருகதாஸ் , திரு. அருணாசலம் இராஜலிங்கம் , திரு. தாமோதரம்பிள்ளை முருகதாஸ், திரு. அருண் வி. கோபித் , திருமதி. பாலாம்பிகை முருகதாஸ் , செல்வி. கார்த்திகா விக்னேஸ்வரன், செல்வி;. லவண்யா பாலசிங்கம் , திரு. திருக்குமரன் இராசலிங்கம் , திரு. அப்பாத்துரை வைரவமூர்த்தி , திரு. நிமலன் சீவரட்ணம் ,திரு. தேவராஜா நீதிராஜா , திரு. வடிவேலு சுரேந்திரன்.

 

0 கருத்துக்கள் :