கடும் குளிர் :-பரமேஸ்வரனின் உடல்நிலை பாதிப்பு

8.11.13

கடும் குளிருக்கும், பலத்த காற்று வீச்சுக்கும், மழைக்கும் மத்தியில் பிரித்தானியப் பிரதமரின் வாசத்தலம் முன்பாக பட்டினிப் போர் புரிந்து வரும் சுப்ரமணியம் பரமேஸ்வரனின் உடல்நிலை பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றது.
கொழும்பில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளும் முடிவைப் பிரித்தானியப் பிரதமர் மீளப்பெற வேண்டும் என வலியுறுத்திக் கடந்த நான்கு நாட்களாக தொடர் பட்டினிப் போராட்டத்தில் பரமேஸ்வரன் ஈடுபட்டு வருகின்றார்.

உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறும் பகுதியில் போதிய இருப்பிட வசதிகள் ஏதும் அற்ற நிலையில் வெறும் படங்குகளை மேலே கொண்ட – மழைநீர் உட்புகக்கூடிய வகையிலான – சிறிய கூடாரத்திற்குள், காற்றுவீச்சைத் தடுப்பதற்குரிய போதிய தடுப்பு வசதிகள் ஏதுமற்ற சூழலில், போர்வைகள் ஈரலிப்புற்ற நிலையில் தற்பொழுது காய்ச்சலால் பரமேஸ்வரன் பீடிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு தனது உடல்நிலை பாதிக்கப்பட்ட பொழுதும்கூட பட்டினிப் போராட்டத்தைத் தொடர்வதில் பரமேஸ்வரன் உறுதியாக உள்ளார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் உருக்கையொத்த உறுதியுடன் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபடும் பரமேஸ்வரனுக்கு உறுதுணையாக வெள்ளிக்கிழமை அனைத்துப் பிரித்தானியாவாழ் தமிழீழ உறவுகளையும் பிரித்தானியப் பிரதமரின் வாசத்தலமான 10 டவுண்ங் வீதிக்கு முன்பாக அணிதிரளுமாறு தமிழின உணர்வாளர்களும், செயற்பாட்டாளர்களும் அறைகூவல் விடுத்துள்ளனர்.

0 கருத்துக்கள் :