இராணுவ வீரருக்கும் தமிழ்ப் பெண்ணுக்கும் யாழில் திருமணம்

20.11.13

யாழ்ப்பாணத்தில் இராணுவ வீரர் ஒருவருக்கும் தமிழ் யுவதியொருவருக்கும் இந்து சமய முறைப்படி இன்று புதன்கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது.
யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தலைமையில் காங்கேசன்துறை தல் சேவன ஹோட்டலில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.

அனுராதபுரம் தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் சமரசிங்க என்ற இராணுவத்தின் இரண்டாவது சிங்க படையணியில் கடமையாற்றும் வீரரும், மானிப்பாய் சுதுமலையைச் சேர்ந்த ரகு தர்மினி என்ற யுவதியுமே திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
திருமணம் இந்து முறைப்படியும் பௌத்த முறைப்படியும் நடைபெற்றது.

0 கருத்துக்கள் :