ராஜபக்சவின் ஆத்திரப் பேச்சுகள் மூலம் அவரது அச்சம் தெரிகிறது

20.11.13

ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை, இன ஒடுக்கல், மனிதநேய உரிமைகள் மீறல், இவைகளை நடத்திய சிங்கள ஆதிக்க அரசினை நோக்கி உலகின் பன்னாடுகளும் தங்களது பார்வையை செலுத்த துவங்கிவிட்டன.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முழுமையாகப் புறக்கணித்திருந்தால், அதன் தாக்கம் உலகளாவிய நிலையில் மேலும் பெரும் விளைவினை சர்வதேச நாடுகள், ஐ.நா. மனித உரிமை ஆணையம், இவை மத்தியில் மேலும் ஏற்படுத்தியிருக்கக் கூடும்.

நிலை தடுமாறிய ராஜபக்ஷவின் ஆவேச, ஆத்திரப்பேச்சுகளே அவரது அச்சத்தை அறிவிப்புகளாக வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றன. 17ம் திகதி கூடிய ´டெசோ´ தீர்மானங்கள் கலங்கரை வெளிச்சம் ஆகும்.
ஒப்புக்கு அழுபவர்கள் யார்?, உண்மையாக அழுபவர்கள் யார்? என்பதை இதுவரை உணராதவர்கள் இப்போதாவது உணரத் தொடங்கியுள்ளார்கள்

0 கருத்துக்கள் :