கணவன் மனைவி தகராறு:ஆணுறுப்பு வெட்டி கணவன் கொலை

3.11.13

வாணியம்பாடி அடுத்த புருஷோத்தமகுப்பத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 35). விவசாயி. இவரது மனைவி பூங்கொடி இவர்களுக்கு 1 மகன் ஒரு மகள் உள்ளனர். ஆறுமுகத்திற்கு குடிபழக்கம் இருந்தது. மேலும் மனைவியின் நடத்தையில் சந்தேக மடைந்து அடிக்கடி சித்ரவதை செய்து வந்தார். இதனால் கணவன் மனைவியிடையே தகராறு இருந்து வந்தது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பூங்கொடி கணவனை பிரிந்து தனது தாய் வீட்டிற்கு சென்றார். 2 மாதங் களுக்கு முன்பு ஆறுமுகம் மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை ஆறுமுகம் பலத்த வெட்டு காயங்களுடன் வீட்டில் பிணமாக கிடந்தார். அவரின் மர்ம உறுப்பு வெட்டபட்டு இருந்தது.

வாணியம்பாடி தாலுக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்  காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதில் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி ஆறுமுகம் அடித்து துன்புறுத்தியதால் அவரை பூங்கொடி வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக பூங்கொடியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துக்கள் :