வேனில் பெண் பாலாத்காரம்: கண்ணை பிடுங்கி கொலை

25.11.13

அசாம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் போகினாடி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், தனது 6 வயது குழந்தையை பள்ளியில் இருந்து அழைந்து வருவதற்காக கடந்த வெள்ளியன்று வேனில் ஏறிச் சென்றார். அப்போது வேனில் இருந்த 4 பேர், அந்த பெண்ணை வேனில் கடத்தினர். பின்னர் பிறகு, அந்த பெண்ணை வேனில் வைத்து, பாலியல் பலாத்காரம் செய்தனர்.

 பின்னர் அந்த கொடூர கும்பல் பெண்ணின் கண்களை தோண்டியெடுத்தது. தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலமாக தாக்கி காயத்தையும் ஏற்படுத்தியது. படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்த பெண்ணை, தேசிய நெடுஞ்சாலையில் போகினாடி போலீஸ் நிலையம் அருகே கீழே தள்ளிவிட்டுச் சென்றுள்ளனர்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் அந்த பெண்ணை மீட்டு கவுஹாத்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடித்து கடும் தண்டனை வழங்க கோரி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெண்கள் அமைப்பினர் கொல்லப்பட்ட அந்த பெண்ணின் உடலை தேசிய நெடுஞ்சாலையில் வைத்து போராட்டம் நடத்தினர். இதனிடையே இந்த வழக்கை விசாரித்து வரும் போலீசார் சந்தேகத்தின் பேரில் இருவரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துக்கள் :