சிங்கள தேசம் விழாக்கோலம் ! தமிழர் தேசம் போர்கோலம் !!

15.11.13

சிங்கள தேசம் விழாக்கோலம் ! தமிழர் தேசம் போர்க்கோலம் !! அனைத்துலகத்தின் பார்வையில் சிறிலங்கா

பொதுநலவாய சிறிலங்கா மாநாட்டினால் சிங்கள தேசம் விழாக்கோலம் பூண்டிருந்த சமவேளை தமிழர் தேசம் போர்கோலம் பூண்டு அனைத்துலகத்தின் பார்வையினை ஈட்டியுள்ளது.


நில அபகரிப்புக்கு எதிரான வலிமாகம் மக்களின் போராட்டமும், காணாமல் போனோரது உறவுகளினது யாழ் போராட்டமும் , சிறிலங்கா விவகாரத்தில் அனைத்துலக ஊடகங்களின் கவனத்தினைப் பெற்றுள்ளது.


பொதுநலவாய மாநாடு அமர்வு உத்தியோகபூர்வமாக இன்று வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில் அதன் சம்பிர்தாய நிகழ்வுகளின் காட்சிப்பதிகள் பின்தள்ளப்பட்டு, வட தமிழீத்தின் மக்கள் போராட்டம் அனைத்துலக ஊடகங்களில் முன்தளப்பட்டுள்ளன.


பொதுநலவாய மாநாட்டினையொட்டி இலங்கையில் குவிந்துள்ள அனைத்துலக ஊடகர்களின் செயற்பாட்டினை கட்டுப்படுத்த சிறிலங்கா எடுத்த முயற்சிகளையும் கடந்து,  நடக்கும் நிகழ்வுகள் இலங்கைத்தீவின் இருவேறு உள்ளக சூழலை அனைத்துலகற்கிற்கும் எடுத்துக்காட்டி வருகின்றது.


பொதுநலவாய மாநாட்டினையொட்டி அனைத்துலக ஊடகங்களில் வெளிவருகின்ற ஒளிப்படங்கள் காணொளிப்பதிவுகள் செய்திக்குறிப்புகள் யாவுமே தமிழர் தேசத்தின் மீதான இராணுமயமாக்கல் மனித உரிமை மீறல்கள் ஊடக சுந்திரம் காணமல் போன உறவுகளின் கதறல்கள் நில அபகரிப்பு மற்றும் போர் குற்றங்களின் சாட்சியங்கள் என தமிழர்களின் நிலையினை பதிவாகிவருகின்றது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகத்துறை அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.


அனைத்துலககத்தின் பிரச்சன்னத்தை வெளியேற்றி விட்டு சாட்சியமற்ற போரினை தமிழர்கள் மீது நடத்திய சிங்களம் தற்போது அனைத்துலக ஊடகங்களின் வாயிலாக அம்பலமாகும் நிலையில் சிங்களத்தின் செய்வதறியாது தடுமாறுவருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.
 

0 கருத்துக்கள் :