யாழ்.நிலாவரை பகுதியில் தாக்குதலுக்கு உள்ளான காவலாளி

19.11.13

யாழ். அச்சுவேலிப் பகுதியில் கடமை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த காவலாளி ஒருவர் முச்சக்கரவண்டியில் வந்த இனந்தெரியாதோரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை இனந்தெரியாதோரே குறித்த காவலாளியை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். அச்சுவேலிப் பகுதியிலுள்ள வங்கியொன்றில்; காவலாளியாக கடமையாற்றும் இவர், கடமை முடிந்து சுன்னாகத்திலுள்ள தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார்.

இதன்போது இவரை பின் தொடர்ந்து முச்சக்கரவண்டியில் வந்த இனம்தெரியாத 4 நபர்கள் நிலாவரைக் கிணற்றுக்கு அருகில் குறித்த காவலாளியைத் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

மேற்படி தாக்குதலில் காயமடைந்த காவலாளி அச்சுவேலி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார்.

இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திலும் இவர் முறைப்பாடு செய்தார்.

0 கருத்துக்கள் :