மங்கலயான் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது எப்படி? வீடியோ

6.11.13

செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா மங்கள்யான் விண்கலத்தை பி.எஸ்.எல்.வி. சி-25 ரொக்கெட் மூலம் இன்று பகல் 2.30 மணியளவில் ஏவியது.
 
இந்த விண்கல முயற்சி வெற்றியா? இல்லையா என்பது 10 மாதங்களுக்குப் பின்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.
 
செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்புள்ளதா எனவும் அங்குள்ள கனிம வளம் மற்றும் வளிமண்டலம் ஆகியவற்றை ஆராய்வதற்காகவும் ஆயிரத்து 340 கிலோ எடை கொண்ட மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு இஸ்ரோ அனுப்பியுள்ளது.
 
மொத்தம் ரூ.450 கோடி (இந்திய ரூபா) செலவிலான இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அடுத்தபடியாக செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பிய பெருமை இந்தியாவுக்குக் கிடைக்கும்.
 
ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து இந்த ரொக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்டது.
 
விண்கலம் செவ்வாய் கிரகத்தை நோக்கிச் செல்லும் வகையில் நிலைநிறுத்தப்பட்ட நேரத்தில் சுமார் 10 நிமிஷங்களுக்கு விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராடார்கள் மூலம் பார்க்க முடியவில்லை. அது தொடர்ந்து தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறது

0 கருத்துக்கள் :