இலங்கை தொடர்பாக ஜெயலலிதா எடுத்த முடிவுக்கு பிரிட்டன் பெண் எம்.பி பாராட்டு

4.11.13

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, பிரிட்டன் முன்னாள் அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இந்த மாதம் 15 ஆம் தேதி நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என அண்மையில் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து, பிரிட்டன் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஜோன் மாரி ரெயன் கூறும்போது,

 
”காமன்வெல்த் நாடுகள் அமைப்பின் கொள்கைகள் கோட்பாடுகளுக்கு மதிப்பளித்து இலங்கை அமர்வுகளில் இந்தியா பங்கேற்கக் கூடாது என கோரி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது.

இதற்காக உலகத் தமிழர் பேரவையின் சார்பில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
ஜோன் மாரி ரெயன், உலகத் தமிழர் பேரவையின் கொள்கை ஆலோசகராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :