சிங்கள குடும்பஸ்தர் ஒருவர் வடக்கில் அடித்து கொலை

4.11.13

வடக்கில் தென்னிலங்கையைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில் கடந்த மாதம் 28 ஆம் திகதி காலை 10 மணியளவில் தனது சகோதனின் வீட்டிற்கு சென்றிருந்த வேளை குறித்த குடும்பஸ்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதில் தலையிலும் நெஞ்சுப்பகுதியிலும் படுகாயமடைந்த அவர் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து கிளிசொச்சி வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.

இந்நிலையில் சிசிச்சை பலனளிக்காத நிலையில் கடந்த 30 ஆம் திகதி இரவு 9.30 மணியளவில் யாழ்.போதனா வைத்திய சாலையில் உயிரிழந்தார்.

மேற்படி குடும்பஸ்தர் மீது தக்குதல் மேற்கொண்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை முல்லைத்தீவுப் பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்.

அத்தோடு கணவன் மனைவிக்கு இடையிலான குடும்ப பிரச்சினையை தடுக்க முற்பட்ட போதே இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

0 கருத்துக்கள் :