இசைப்பிரியாவை படுகொலை செய்தது கண்டிக்கத்தக்கது- ப.சிதம்பரம்

2.11.13

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது ஏராளமான விடுதலைப்புலிகளுடன், அப்பாவி பொதுமக்களும் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப்பிரிவில் இடம்பெற்றிருந்த இசைப்பிரியாவை ராணுவம் சுட்டுக்கொன்றது.

இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் மிகவும் கொடூரமான முறையில் கொன்றது தொடர்பான புதிய காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த காட்சிகள் அடங்கிய வீடியோவை பிரிட்டனைச் சேர்ந்த சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மரியாதை நிமித்தமாக தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று அவர் இல்லத்தில் சந்தித்தார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இசைப் பிரியா இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. இலங்கை போரின் போது மனித உரிமை மீறியதற்காக ஆதாரம் உள்ளது. அதற்காக விசாரணையை இலங்கை எதிர்கொள்ள வேண்டும்.

காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வது பற்றி இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை. பிரதமர் கலந்து கொள்வார் என்று காங்கிரஸ் உயர்நிலைக்குழு முடிவு எடுத்தது எனக்கூறுவது தவறு.
இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துக்கள் :