யாழ். புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இளம் பெண் கடத்தல்!!

12.11.13

இன்று செவ்வாய்க்கிழமை  இனம் தெரியாதவர்களினால்  மாலை 6.30 மணியளவில்  இளம் பெண் ஒருவர் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வைத்து கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இப்பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

புன்னாலைக்கட்டுவன் பலாலி வீதியில் அமைந்துள்ள ஆயர் கடவைப் பிள்ளையார் ஆலயத்திறக்கு அருகாமையில் உந்துருளியில் வந்த இளைஞர் ஒருவர் அந்த வழியால் வந்த இளம் பெண் ஒருவரை மறித்த கதைத்தக்கொண்டு நின்றதாகவும், அந்த நேரத்தில் ஒரு சிற்றூர்த்தியில் வந்து குறிப்பிட்ட இளம் பெண்னை பலாத்காரமான முறையில் ஏற்றிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து சிற்றூர்த்தியில் வந்தவர்களை பின் தொடர்ந்து உந்துருளியில் வந்த இளைஞரும் தப்பிச் சென்றுள்ளார்.

குறிப்பிட்ட இளம் பெண் கடத்தப்பட்ட இடத்தில் பெண்ணினுடைய ஈருறுளி மற்றும் கைப்பை, கைபேசி என்பனவும் அநாதரவான நிலையில் காணப்பட்டன. சுன்னாகம் காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறிப்பிட்ட இடத்திற்கு சிங்களக் காவல்துறையினர் சென்று விசாரனைகளை மேற்க்கொண்டுள்ளார்கள். குறிப்பிட்ட இடத்திலிருந்து பெண்னைக் கடத்திய சிற்றூர்த்தி NPJO 1077 என்ற இலக்கம் உடைய வாகனம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :