இசைப்பிரியா ஆவண படத்தை பார்த்தேன் :பாதிக்கு மேல் என்னால் பார்க்கவே முடியவில்லை: ஜெயந்தி நடராஜன்

4.11.13

மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
 அப்போது அவர்,   ‘’வெளிநாடுகளுடன் நல்லுறவு ஏற்படுத்துவதற்குத்தான் பிரதமர் மன் மோகன்சிங் அயல்நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் தான் ஏற்றுமதி, இறக்கு மதியை மேம்படுத்த முடியும்.

 இதனால் தொழில்கள் வளர்ச்சி அடையும். இதனால் மேற்கொள்ளப்படுகிற பயணம்.  வீணான செலவு என்று கூறுவது தவறு. நாட் டின் பொருளாதார வளர்ச் சிக்கான அன்னிய செலா வணியை உயர்த்த வெளி நாட்டு சுற்றுப்யணம் அவசியமாகிறது.

இது மக்களின் நலன் கருதி நாட்டின் வளர்ச்சிக்காக  காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வது பற்றி நல்ல முடிவு எடுப்பார். அவர் கலந்து கொள்ள கூடாது என்று தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். கடிதம் மூலமாகவும் தெரிவித்துள்ளேன். தமிழ் மக்களின் உணர்வுகளை அறிந்து பிரதமர் நல்லமுடிவு எடுப்பார்.

இசைப்பிரியா ஆவண படத்தை பார்த்தேன் அந்த காட்சிகளை பார்க்கவே முடியாது. அதைபாதிக்கு மேல் என்னால் பார்க்கவே முடியவில்லை’’என்று கூறினார்.

0 கருத்துக்கள் :