முதலமைச்சரின் உருவப்பதாகை விசமிகளால் கிழிப்பு

28.11.13

உதயன் விருந்தினர் விடுதியில் இருந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.வீக்கினேஸ்வரனின் உருவப் பதாகை விசமிகளால் கிழித்து நாசம் செய்யப்பட்டதுடன் தீயும் மூடப்படட்டுள்ளது. வடக்கு மாகாண சபை தேர்தலின் போது சி.வி.விக்கினேஸ்வரனின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக சிவகுருநாதர் வீதியில் உள்ள உதயன் விருந்தினர் விடுதி பயன்படுத்தப்பட்டு வந்தது.

அதற்காக அங்கு அமைக்கப்பட்டிருந்த முதலமைச்சரின் உருவப்பதாகை நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் கிழித்து நாசம் செய்யப்பட்டதுடன் அதற்கு தீயும் மூட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதேவேளை, நேற்றைய தினம் உதயன் பணிமனையில் மரம் நாட்டு வைபவம், இரத்ததானம் என்பன இடம்பெற்றதுடன் கல்வி அமைச்சரின் அலுவலகத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் மரமும் நாட்டியிருந்தார். இந்தநிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 

0 கருத்துக்கள் :