சீனா முதன் முதலில் இலங்கைக்கு கொடுத்த அதிர்ச்சி

19.11.13

இலங்கையில் மனிதஉரிமைகளை பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று சீனா கோரிக்கை விடுத்துள்ளது.
பீஜிங்கில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கயின் கங் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,

வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு பொருளாதார, சமூக வேறுபாடுகளால், மனிதஉரிமைகள் பாதுகாப்பிலும் வேறுபாடுகள் இருக்கக் கூடும். எனவே இலங்கையில், மனிதஉரிமைகளைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் முக்கியமாக முயற்சிகளை எடுக்க வேண்டும். அதேவேளை, உலகின் ஏனைய நாடுகள், ஆக்கபூர்வமான உதவிகளை வழங்க வேண்டும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் மனிதஉரிமை விவகாரங்கள் தொடர்பில் பிரித்தானியப் பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை தொடர்பாக, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளரிடம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “இது பொதுநலவாயத்துக்குள் உள்ள விவகாரம்.அதேவேளை, இது மனிதஉரிமைகள் பற்றிய விவகாரம் என்று நான் நம்புகிறேன் என்றார். மேலும், நாடுகளுக்கிடையில் பேச்சுக்களும் தொடர்பாடலும் இருக்க வேண்டும்.

மனிதஉரிமை விவகாரங்களில் அனைத்து நாடுகளுடனும் பேச்சு மற்றும் தொடர்பாடல் மூலம் பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தும் கொள்கையை நாம் எப்போதும் பேணி வருகிறோம்.
அனைத்துலக மனிதஉரிமைகளை ஊக்குவிக்க ஆக்கபூர்வமாக செயற்படுகிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள சீனா முதல்முறையாக இலங்கையின் மனிதஉரிமை விவகாரங்கள் குறித்து, ஆச்சரியமளிக்கும் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :