பிரான்ஸ் வாழ் தமிழ் உறவுகளுக்கு அவசர அழைப்பு

4.11.13

2014ம் ஆண்டுக்குரிய பிரென்சு அழகுராணிக்கான தேர்வுப் போட்டியில் பங்குபெற்றும் பெண்களின் அலங்கார அணிவகுப்பு இம்முறை இலங்கையில் இடம்பெறவிருக்கின்ற நிலையில், இவ்விவகாரத்தில் பெண்கள் மீதான இலங்கையின் கோர முகத்தினை அம்பலப்படுத்த பிரான்ஸ் வாழ் தமிழ் உறவுகளுக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள இசைப்பிரியாவின் காணொளிப் பதிவு தமிழ் பெண்கள் மீதான சிங்களத்தின் கொடுஞ்செயலை அனைத்துலக அரங்கில் மீண்டுமொரு தடவை அம்பலப்படுத்தியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 11ம் திகதி 39 பிரென்சு அழகுராணி போட்டிக்குரிய பெண்கள், அலங்கார அணிவகுப்புக்காக இலங்கைக்கு பயணமாகவுள்ள நிலையில், பெண்கள் மீதான இலங்கையின் கோர முகத்தினை அம்பலப்படுத்த அவசர ஒன்றுகூடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் பிரபல AFP செய்தி ஸ்தாபனத்திற்கு முன் Palace de la Bource எனும் இடத்தில் (06-11-2013) புதன்கிழமையன்று மாலை 15:30 மணி முதல் 17:30 மணி வரை இந்த கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் இளையோர்கள் மற்றும் பெண்கள் அதிகம் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என உரிமையோடு கோரப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :