வணக்கம்” நீக்­கப்­பட்­டது ஏன்? ஊட­க­வி­ய­லாளர் கேள்வி

17.11.13

பொது­ந­ல­வாய மாநாட்டு இலட்­சி­னையில் “வணக்கம்” என்ற பதத்தை நீக்­கி­விட்டு “ஆயு­போவன்” என்ற சிங்­களப் பதத்தை தமிழில் எழு­தப்­பட்­டது ஏன்? என்று வெளி­நாட்டு தமிழ் ஊட­க­வி­ய­லாளர் எழுப்­பிய கேள்­விக்கு அந்தக் குழு வில் தான் இல்லை என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதி­ல­ளித்தார்.

பொது­ந­ல­வாய மாநாட்டு இலட்­சி­னையில் அழ­கான தமிழில் “வணக்கம்” என்று எழு­தப்­பட்­டி­ருந்­த­தற்கு மேலாக “ஆயு­போவன்” என்ற சிங்­கள வார்த்தை தமிழில் ஒட்­டப்­பட்­டுள்­ளது. இது ஏன் என்று அந்த ஊட­க­வி­யலாளர் கேள்வி எழுப்­பினார்.

இதற்கு ஒரே வரியில் அமைச்சர் நிமல் சிரி­பால டி சில்வா பதி­ல­ளித்த பின்னர் அநுர பிரி­ய­தர்­ஷன யாப்பா அந்த ஊட­க­வி­ய­லா­ளரைப் பார்த்து “நீங்கள் வேண்­டு­மென்றே இந்தக் கேள்வியை எழுப்புகின்றீர்கள்” என்று குறிப்பிட்டார்.

0 கருத்துக்கள் :