இலங்கைக்கு பிரிட்டன் மீளவும் எச்சரிக்கை

23.11.13

இலங்கை அர­சாங்கம் போர்க் குற்ற விசா­ர­ணைகள் தொடர்பில் மேல­திக முன்­னேற்­றத்தை காணத் தவறும் பட்­சத்தில் சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்றை முன்­னெ­டுக்க ஊக்­கு­விக்­கப்­போ­வ­தாக பிரித்­தா­னிய அர­சாங்கம் மீள வலி­யு­றுத்­தியுள்­ளது.
 
பிரித்­தா­னிய வெளி­நாட்டு மற்றும் பொது­ந­ல­வாய விவ­காரம் சிரேஷ்ட அமைச்­ச­ரான பரோனெஸ் வார்ஸி பிர­புக்கள் சபையில் உரை­யாற்­று­கையில், இலங்­கையில் கடந்த வாரம் இடம்­பெற்ற பொது­ந­ல­வாய உச்­சி­மா­நாட்டில் பிர­தமர் டேவிட் கமரூன் கலந்­து­கொண்­டமை சரி­யா­னது எனத் தெரி­வித்தார். பிர­தமர் அவ்­வாறு சென்­றதன்  மூலம் இலங்­கை­யி­லுள்ள நிலைமை தொடர்பில் கவ­ன­யீர்ப்­பொன்றை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் 1948ஆம் ஆண்­டிற்கு பின்னர் அந்­நாட்டின் வட­ப­கு­திக்கு விஜயம் செய்த முத­லா­வது வெளி­நாட்டு தலை­வ­ரா­கவும் அவர் உள்ளார் என பரோனெஸ் வார்ஸி தெரி­வித்தார்.
 
அவ­ரது தீர்­மானம் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு அவ்­வி­டத்தை சென்­ற­டை­வ­தற்­கான அனு­ம­தியை பெற்­றுக்­கொ­டுத்­துள்­ளது. இல்­லை­யெனில் அவர்கள் அங்கு செல்­வது சாத்­தி­ய­மற்­ற­தா­கி­யி­ருக்கும். அத்­துடன் உள்ளூர் மக்கள் காணாமல் போன­வர்­களின் குடும்­பங்­க­ளுக்கு சர்­வ­தேச ரீதி­யி­லான குரல் கொடுக்­கப்­பட்­டுள்­ளது என அவர் மேலும் கூறினார்.
 
பிர­தமர் தனது கண்­ணோட்­டங்­களில் துணி­க­ர­மா­கவும் முடி­வா­கவும் உள்ளார். அவர் ஜனா­தி­ப­தி­யுடன் (இலங்கை ஜனா­தி­ப­தி­யுடன்) மேற்­கொண்ட வெளிப்­ப­டை­யான கடு­மை­யான சந்­திப்பில் அவர் போர் குற்­றங்கள் தொடர்பில் நம்­ப­க­மான ஒழிவு மறை­வில்­லாத சுயா­தீன விசா­ரணை உள்­ள­டங்­க­லாக ஒரு தொகை விட­யங்­களில் மேலும் முன்­னேற்றம் காண்­ப­தற்கு இலங்­கைக்­குள்ள தேவைப்­பாட்டை தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளார். இலங்கை அதனைச் செய்யத் தவறும் பட்­சத்தில் பிரித்­தா­னியா சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்­றுக்கு ஆத­ர­வ­ளிக்கும் என பரோனெஸ் வார்ஸி தெரி­வித்தார்.
 
இரா­ணு­வத்­தி­னரை வெளி­யேற்றல், கற்­றுக்­கொண்ட பாடங்­களும் நல்­லி­ணக்­கமும் ஆணை­ய­கத்தின் சிபார்­சு­களை சரி­யான முறையில் அமுல்­ப­டுத்தல் உள்­ள­டங்­க­லாக வடக்­கிற்­கான அர்­த­்த­முள்ள அர­சியல் தீர்­வொன்று தொடர்­பிலும் மேற்­படி பேச்­சு­வார்த்­தை­களில் கவனம் செலுத்­தப்­பட்­ட­தாக அவர் குறிப்­பிட்டார்.
 
எனினும் இலங்­கையால் மட்­டு­மல்­லாது பொது­ந­ல­வாய சாசன கொள்­கை­க­ளுக்கு அமை­வான ஏனைய பொது­ந­ல­வாய நாடு­க­ளாலும் மேற்­படி மேல­திக தேவைப்­பா­டுகள் நிறை­வேற்­றப்­பட வேண்­டி­யுள்­ளதை நான் ஏற்­றுக்­கொள்­கிறேன் என அவர் கூறினார்.
இந்­நி­லையில் பிரித்­தா­னிய பாரா­ளு­மன்ற பொது சபையில் உரை­யாற்­றிய அந்­நாட்டு அமைச்சர் மைக்கோல் பால்லொன் விப­ரிக்­கையில், இலங்­கைக்­கான ஆயு­தங்கள் ஏற்­று­மதி விண்­ணப்­பங்கள் அனைத்தும் ஒவ்­வொன்­றாக தேசிய விதி­க­ளுக்கு அமை­வாக மதிப்­பீடு செய்­யப்­பட்டு வரு­வ­தாக கூறினார்.
 
இதன்­போது இலங்கை தொடர்­பான தீர்­மானம் உப­க­ர­ணங்கள் விதி­க­ளுக்­க­மை­வாக பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளதா என்ப­துடன் 2009ஆம் ஆண்டு முடி­வ­டைந்த இரா­ணுவ மோதல்­களின் போது சர்­வ­தேச மனி­தா­பி­மான மற்றும் மனித உரிமைச் சட்­டங்கள் மீறப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­படும் குற்­றச்­சாட்­டு­களும் கவ­னத்தில் எடுத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தாக அவர் தெரி­வித்தார்.
 
எனினும் வர்த்­தக கடல் கொள்­ளை­க­ளுக்கு எதி­ரான பணியை பொறுப்­பேற்­றுள்ள கடல்சார் பாது­காப்பு கம்­ப­னி­களின் பயன்­பா­டுக்­காக ஆயு­தங்கள் மற்றும் ஏனைய உப­க­ர­ணங்கள் தொடர்பில் ஒரு தொகை அனு­ம­திப்­பத்­தி­ரங்­களை பிரித்­தா­னியா வழங்­கி­யுள்­ளதால் இலங்­கைக்­கான ஆயுத ஏற்­று­ம­திகள் அண்­மையில் அதி­க­ரித்­து­ள்­ள­தாக அவர் தெரி­வித்தார்.
 
கடற்­கொள்­ளை­யர்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளா­னது சர்­வ­தேச வர்த்­த­கத்­துக்கும் பாது­காப்­புக்கும் அவ­சி­ய­மா­ன­தாகும். மேற்­படி ஆயு­தங்கள் இலங்­கையில் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தப்பட்டிருக்குமா, மேற்படி கம்பனிகள் தனிப்பட்ட பாதுகாப்பு சேவை வழங்குனர்களுக்கான சர்வதேச உடன்படிக்கையில் முழுமையாக கைச்சாத்திட்டுள்ளனவா என்பன மேற்படி விண்ணப்பங்கள் தொடர்பான பரிசீல னைகளின்போது கவனத்திற் கொள்ள ப்படுகின்றன.
 
இந்த அனுமதிப்பத்திரங்கள் அனை த்தும் கடற்கொள்ளைக்கு எதிரான பணி களுக்கானதாகும். அவை இலங்கை அரசா ங்கத்துக்கு விநியோகிக்கப்படவில்லை என மைக்கோல் பல்லொன் கூறினார்.

0 கருத்துக்கள் :