யாழ்.சுன்னாகத்தில் காதல் ஜோடிக்கு இராணுவத்தினர் எச்சரிக்கை:

22.11.13

ஆட்கள் இல்லாத பற்றை வளவில் ஒழுங்கீனமாக நடக்க முற்பட்ட காதல் ஜோடியொன்று இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பற்றைவளவு இத்தகைய செயல்களுக்கு அடிக்கடி பயன்படுத்தப்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுன்னாகம், மயிலனிப் பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.தனியார் வளவில் காணப்படும் பற்றையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி கள்ளக் காதல் புரிந்தவர்கள் தகவலொன்றின் அடிப்படையில் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டனர்.
இவர்களை விசாரணை செய்த இராணுவத்தினர், இனிமேலும் இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்று எச்சரித்து விடுவித்தனர்.

0 கருத்துக்கள் :