கடைசி நிமிடம் வரை கொழும்பு வர விரும்பினாராம் மன்மோகன்சிங்

21.11.13

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காதது வருத்தமளிப்பதாக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்றுக்காலை, அலரி மாளிகையில், மூத்த ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்க முடியாமல் போனது உண்மையில் கவலையளிக்கிறது.
அவர் கடைசி நிமிடம் வரை இங்கு வருவதற்கு விரும்பினார் என்பது எனக்குத் தெரியும்.

இது ஒரு அரசியல் என்பது உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும்.
அவரது நிலையில் நான் இருந்திருந்தால் கூட இதே முடிவைத் தான் எடுத்திருப்பேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :