கிளிநொச்சியில் காணாமல் போயுள்ள குடும்பஸ்தர்!

19.11.13

கிளிநொச்சி கண்டாவளையைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கண்டாவளை, பிரதான வீதியைச் சொந்த முகவரியாகவும் உருத்திரபுரம் கூழாவடியில் வசித்து வந்தவருமான சிவகுமார் பாஸ்கரன் (35 வயது மதிக்கத்தக்கவர்) என்பரே கட ந்த 15ம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.
உருத்திரபுரம் கூழாவடியியிருந்து கண்டாவளைக்கு செல்வதற்காக கிளிநொச்சி பேரூந்து தரிப்பிடத்துக்கு சென்றவர் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

இதுவரை தனது தாயாரிடமோ மனைவியிடமோ குறித்த நபர் வந்து சேரவில்லை எனவும் மாகாண சபை தேர்தற் காலத்தின் போது ஏற்பட்ட பிணக்கு காரணமாக குறித்தவர் காணாமல் போயிருக்கலாம் எனவும் குடும்பத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

0 கருத்துக்கள் :