இசைபிரியா படுகொலை சம்பவத்திற்கு மன்மோகன்சிங்கும் பொறுப்பா?

7.11.13

இசைபிரியா படுகொலை சம்பவத்திற்கு
மன்மோகன்சிங்கும் பொறுப்பா? ஞானதேசிகன் மறுப்பு .தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் ஞானதேசிகன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

 காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்ற விஷயத்தில் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் மத்திய மந்திரிகள் கூறிய கருத்துக்களில் முரண்பாடு தெரிகிறதே?

முரண்பாடுகள் எதுவும் இல்லை. அவரவர் கருத்துக்களை சொல்லியிருக்கிறார்கள்.


காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால் தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் மந்திரிகள் ராஜினாமா செய்வார்களா?

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வது சம்பந்தமாக இன்னும் முடிவு செய்யவில்லை. ஆகவே யூகத்தின் அடிப்படையில் கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது.


இசைபிரியா படுகொலை சம்பவத்திற்கு இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கும் பொறுப்பு என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளாரே?

இசைபிரியா படுகொலை சம்பவத்திற்கு இலங்கை ராணுவமே காரணம். ராணுவத்தில் உள்ள சிலர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த விஷயத்தில் பிரதமர் மன்மோகன்சிங் பற்றி கொச்சைப்படுத் தியிருப்பது கண்டனத்துக்குரியது. கண்டிக்கத்தக்கது.


காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால் அதற்கான விளைவை காங்கிரஸ் சந்திக்க நேரிடும் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியிருக்கிறாரே?

காங்கிரஸ் கட்சியை யாராலும் வீழ்த்த முடியாது. இலங்கை தமிழர் பிரச்சினைக்கும் தேர்தலுக்கும், கட்சி அரசியலுக்கும் சம்பந்தமில்லை.


காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியல் எப்போது வெளியாகும்?

அது பற்றி எனக்கு தெரியாது.


ஏற்காடு இடைத்தேர்தலில் யாரை ஆதரிக்க போகிறீர்கள்?

ஏற்காடு இடைத்தேர்தலில் தங்களை ஆதரிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதம் முறைப்படி டெல்லி தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. கட்சி தலை மை எடுக்கும் முடிவு குறித்து முறைப்படி தி.மு.க. தலைவருக்கு தெரியப்படுத்துவோம்.

0 கருத்துக்கள் :