சர்ச்­சையைக் கிளப்­பிய ஆனை­யி­றவு மலர்­வ­ளையம்

18.11.13

தீபக் ஒப்ராய் வைத்த மலர் வளை­யத்தில் வன்­மு­றை­களில் உயி­ரி­ழந்த அனைத்து அப்­பாவி மக்­க­ளுக்கும் என்று மூன்று மொழி­க­ளிலும் எழு­தப்­பட்ட வெள்ளை நிறப்பட்­டி­யொன்றும் வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

அது ஒன்றே அது போரில் இறந்த படை­யி­ன­ரையோ புலி­க­ளையோ உள்­ள­டக்­கிய அஞ்­சலி நிகழ்வு அது­வல்ல என்­ப­தற்­கான அடை­யா­ள­மாக இருந்­தது. அடுத்து, ஆனை­யி­றவில் புலி­களின் எந்த நினை­வி­டமும் இல்லை.
மனி­த­ உ­ரிமை மீறல்­க­ளுக்கு இலங்கை அர­சாங்கம் பதி­ல­ளிக்கத் தவ­றி­விட்­ட­தாக குற்­றம்­சாட்டி, கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்­க­ணிக்க கனே­டியப் பிர­தமர் ஸ்டீபன் ஹாப்பர் எடுத்த முடி­வினால் கடுப்­பா­கி­யி­ருந்த இலங்கை அர­சாங்­கத்­துக்கு கன­டாவின் இன்­னொரு நட­வ­டிக்கை கடு­மை­யான எரிச்­சலை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

கன­டாவின் பிர­தி­நி­தி­யாக கொமன் வெல்த் மாநாட்டில் பங்­கேற்க வந்­தி­ருந்த, வெளி­வி­வ­கார மற்றும் சர்­வ­தேச மனி­த­ உ­ரி­மைகள் விவ­கா­ரங்­க­ளுக்­கான நாடா­ளு­மன்றச் செயலர் தீபக் ஒப்ராய், கடந்த செவ்­வாய்க்­கி­ழமை ஆனை­யி­றவில் மலர்வளையம் வைத்த விவ­காரம் தான் அது.

இணை­ய­மைச்சர் பத­விக்கு இணை­யான நாடா­ளு­மன்றச் செய­ல­ரான தீபக் ஒப்­ராயை, கொமன்வெல்த் மாநாட்­டுக்­கான தமது தலைமைப் பிர­தி­நி­தி­யாக கொழும்­புக்கு அனுப்­பி­யி­ருந்­தது கனடா.
இவர் தன்­சா­னி­யாவில் பிறந்த, ஒரு இந்­திய வம்­சா­வளி கனே­டியர்.
அவர்,கடந்த வாரம் யாழ்ப்­பாணம் சென்று கத்­தோ­லிக்கத் திருச்­ச­பையின் யாழ். மறை­மா­வட்ட ஆயர் தோமஸ் சௌந்­த­ர­நா­யகம், வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் ஆகி­யோரைச் சந்தித்தி­ருந்தார்.
தீபக் ஒப்­ரா­யு­ட­னான சந்­திப்பின் போது, இறந்­த­வர்­க­ளுக்கு நினைவு கூரும் உரிமை கூட இல்­லா­த­வர்­க­ளாக தமிழ் மக்கள் இருப்­பது குறித்து யாழ். ஆயர் கவலை வெளி­யிட்­ட­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

யாழப்­பாண பய­ணத்தை முடித்துக் கொண்டு, தரை­வ­ழி­யாகத் திரும்­பிய கனே­டிய நாடா­ளு­மன்றச் செயலர் தீபக் ஒப்ராய், ஆனை­யி­றவில் அமைந்­துள்ள படை­யி­னரின் போர் வெற்றிச் சின்­னத்­துக்கு 1 கி.மீ தொலைவில், கடல்­நீ­ரேரி ஓர­மாகச் சென்று மலர்வளையம் ஒன்றை வைத்து, அஞ்­சலி செலுத்­தி­யி­ருந்தார்.
தீபக் ஒப்­ராயும், கனே­டியத் தூதுவர் ஷெல்லி வைற்­னிங்கும் போரில் இறந்­த­வர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்தி விட்டு, தாம் எடுத்து வந்த மலர் வளை­யத்­தையும் கூடவே எடுத்துச் சென்று விட்­டனர்.
முன்­ன­தாக, அந்த இடத்தில் மலர் வளையம் வைப்­ப­தற்கு அவர்­க­ளுடன் சென்ற இலங்கை அரச அதி­காரி ஒருவர் எதிர்ப்புத் தெரி­வித்­த­தா­கவும், ஆனால் அதை அவர்கள் பொருட்­ப­டுத்­த­வில்லை என்றும் தக­வல்கள் கூறு­கின்­றன.
கன­டாவின் உயர்­மட்டப் பிர­தி­நிதி ஒருவர், ஆனை­யி­றவில் மலர் வளையம் வைத்த படத்­துடன் செய்தி வெளி­யா­னதும், அரச தரப்­புக்கு கடும் சீற்றம் ஏற்­பட்­டது.
அதன் விளைவு - மறுநாள் ஆங்­கில நாளிதழ், ஒன்றில் “கனே­டியப் பிர­த­மரின் பிர­தி­நிதி, உயி­ரி­ழந்த விடு­தலைப் புலி­க­ளுக்கு ஆனை­யி­றவில் உள்ள நினை­வி­டத்தில் அஞ்­சலி செலுத்­தினார்” என்ற தலைப்புச் செய்­தி­யுடன் வெளி­யா­னது.
ஏரிக்­கரை ஊட­கங்கள் அரச கட்­டுப்­பாட்டில் இருந்­தாலும், குறித்த ஆங்­கில நாளி­த­ழையே, பாது­காப்புச் செயலர் கோத்­தா­பய ராஜ­பக்ச தமது பிர­சாரத் தேவை­க­ளுக்குப் பயன்­ப­டுத்திக் கொள்­வது வழக்கம்.
பல்­வேறு சர்ச்­சைக்­கு­ரிய கருத்­து­களை அவர் அந்த ஆங்­கில நாழிதள் மூல­மா­கவே, வெளிப்­ப­டை­யா­கவோ அல்­லது மறை­மு­க­மா­கவோ வெளிப்­ப­டுத்­து­வ­துண்டு.
குறிப்­பாக மேற்­கு­ல­கிற்கு எதி­ரான கருத்­துகள், போர்க்­குற்­றங்­க­ளுக்கு எதி­ரான மறுப்­புகள், வடக்கு, கிழக்கு இணைப்­புக்கு எதி­ரான கருத்­துகள், மாகா­ணங்­க­ளுக்கு காணி, பொலிஸ் அதி­கா­ரங்கள் வழங்­கு­வ­தற்கு எதி­ரான கருத்­துகள், இந்­தி­யாவை சீண்டும் கருத்­துகள், ஐ.நாவை விமர்­சிக்கும் கருத்­து­களை அவர், இந்த நாளிதழ் மூலமே அடிக்­கடி வெளி­யி­டு­வது வழக்கம்.
அர­சாங்­கத்­துக்கு சாத­க­மாக எவ்­வாறு செயற்­ப­டு­வது என்­பதை குறித்த நாளி­தழை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று அரச கட்­டுப்­பாட்­டி­லுள்ள ஊட­கங்­க­ளிடம் அவர் கூறி­ய­தான தக­வல்­களும் ஏற்­க­னவே வெளி­யா­னது தான்.
சில சந்­தர்ப்­பங்­களில், சர்ச்­சைக்­கு­ரிய கருத்­து­களை, அல்­லது தக­வல்­களை அவர், வெளி­யிடும் போது தனது பெயரைப் பயன்­ப­டுத்திக் கொள்­வ­தில்லை. தனியே மூத்த அர­சாங்க பாது­காப்பு உய­ர­தி­காரி என்று மட்டும் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டுவார்.
இது பல சந்­தர்ப்­பங்­களில் தேவை­யற்ற சர்ச்­சை­களை தவிர்ப்­ப­தற்­காக, அர­சாங்க அமைச்­சர்­களும், அதி­கா­ரி­களும் கையாளும் வழக்­க­மான வழி­முறை தான்.
கனே­டியப் பிர­தி­நிதி தீபக் ஒப்ராய், கன­டாவில் தடை­செய்­யப்­பட்­டுள்ள விடு­தலைப் புலி­க­ளுக்கு மலர் வளையம் வைத்து அஞ்­சலி செலுத்­தி­ய­தா­கவும், கன­டாவில் உள்ள விடு­தலைப் புலி­களின் செயற்­பாட்­டா­ளர்­களைத் திருப்­திப்­ப­டுத்­தவே அவர் இவ்­வாறு நடந்து கொண்­ட­தா­கவும் மூத்த பாது­காப்பு உய­ர­தி­காரி ஒருவர் தெரி­வித்­த­தா­கவே, அந்த ஆங்­கில நாழிதழில் வெளி­யான செய்தி அமைந்­தி­ருந்­தது.
அந்தச் செய்தி உள்­நோக்கம் நிறைந்­தது என்­பதை எவ­ராலும் புரிந்து கொள்­ள­முடியும். ஏனென்றால், தீபக் ஒப்ராய் வைத்த மலர் வளை­யத்தில் வன்­மு­றை­களில் உயி­ரி­ழந்த அனைத்து அப்­பாவி மக்­க­ளுக்கும் என்று மூன்று மொழி­க­ளிலும் எழு­தப்­பட்ட வெள்ளை நிறப்பட்­டி­யொன்றும் வைக்­கப்­பட்­டி­ருந்­தது.
அது ஒன்றே அது போரில் இறந்த படை­யி­ன­ரையோ புலி­க­ளையோ உள்­ள­டக்­கிய அஞ்­சலி நிகழ்வு அது­வல்ல என்­ப­தற்­கான அடை­யா­ள­மாக இருந்­தது. அடுத்து, ஆனை­யி­றவில் புலி­களின் எந்த நினை­வி­டமும் இல்லை.
அங்­கி­ருந்த புலி­களின் நினைவுச் சின் னங்கள் எல்­லாமே அழிக்­கப்­பட்டு விட்­ட தென்­பது அந்தக் கருத்தை வெளி­யிட்ட மூத்த பாது­காப்பு அதி­கா­ரிக்கும், செய்­தியை எழு­திய ஊட­க­வி­ய­லா­ள­ருக்கும் நன்­றா­கவே தெரியும். படை­யி­னரின் போர் வெற்றிச் சின்னம் மட்டும் தான் ஆனை­யி­றவில் இப்­போ­துள்­ளது.
ஆனால், 30 ஆண்­டு­காலப் போரில் ஆனை­யி­றவு ஒரு வலி­மிக்க அடை­யா­ள­மாக இருந்­தது என்­பதில் எந்த சந்­தே­கமும் இல்லை. ஆனை­யி­றவைக் கைப்­பற்­று­வ­தற்­கா­கவும் அதைத் தக்க வைத்துக் கொள்­வ­தற்­கா­கவும் ஆயி­ரக்­க­ணக்­கான படை­யி­னரும், புலி­களும் உயிரைக் கொடுத்­தனர்.
முள்­ளி­வாய்க்­கா­லுக்கு அடுத்து, போரின் அதிக வடுவை சந்­தித்த இட­மாக ஆனை­யி­றவு உள்­ளது. அந்த வகையில், கனே­டியப் பிர­தி­நிதி ஆனை­யி­றவில் மலர் வளையம் வைத்­தது புலி­க­ளுக்­கா­கவே என்றால் கூட அதைப் படை­யி­ன­ருக்­கான அஞ்­ச­லி­யா­கவும் எடுத்துக் கொள்­ளலாம்.
ஆனால், கடந்த வெள்­ளிக்­கி­ழமை குறித்த ஆங்­கில நாளி­தழில் கொமன் வெல்த் மாநாட்­டுக்கு வரும் வெளி­நாட்டு பிர­தி­நி­திகள் பிரி­வி­னை­வா­தத்­துக்கு துணை­போகக் கூடாது என்று பாது­காப்பு செயலர் வெளிப்­ப­டை­யாக கருத்து வெளி­யிட்­டி­ருந்தார்.
அதில், கனே­டியப் பிர­தி­நிதி ஆனை­யி­றவு தவிர்ந்த வேறொரு இடத்தில் மலர் வளையம் வைத்­தி­ருந்தால் அது சர்ச்­சைக்­கு­ரி­ய­தல்ல என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார்.
ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை அண்­மையில், இலங்­கைக்கு வந்­தி­ருந்த போது போரில் இறந்த அனை­வ­ரி­னதும் நினை­வாக முள்­ளி­வாய்க்­காலில் மலர்­வ­ளையம் வைத்து அஞ்­சலி செலுத்த திட்­ட­மிட்­டி­ருந்தார்.
ஆனால், அதற்கு அர­சாங்கம் கடும் எதிர்ப்பை வெளி­யிட்­டதால் அந்த திட்­டத்தை அவர் கைவிட்டார்.
நவ­நீ­தம்­பிள்ளை தான் செல்­லு­மி­டங்­களில் போரில் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் நினை­வி­டங்­களில் அஞ்­சலி செலுத்தும் வழக்­கத்தை கொண்­டவர்.
இலங்கைப் பய­ணத்தின் பின்னர் ஜேர்­ம­னிக்குச் சென்ற போது நாசிப் படை­களின் வதை முகாமில் இறந்­த­வர்கள் நினை­வாக முன்னர் வதை­மு­கா­மாக இருந்த இடத்­துக்குச் சென்று அஞ்­சலி செலுத்­தி­யி­ருந்தார் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.
முள்­ளி­வாய்க்­காலில் அனை­வ­ருக்­கா­கவும் அஞ்­சலி செலுத்த முயன்ற நவ­நீ­தம்­பிள்­ளையை, புலி­களின் தலைவர் பிர­பா­க­ர­னுக்கு அவர் நந்­திக்­க­டலில் அஞ்­சலி செலுத்த முயன்­ற­தாக கதையைத் திரித்து விட்­டது அர­சாங்கம்.
அது பலத்த சர்ச்­சை­யையும் ஏற்­ப­டுத்­தி­யது. நவ­நீ­தம்­பிள்ளை முள்­ளி­வாய்க்­காலில் அஞ்­சலி செலுத்த முற்­பட்­டது தவறு என்றும் பொது­வான இடத்தில் அஞ்­சலி செலுத்­தி­யி­ருக்­கலாம் என்றும் வெளி­வி­வ­கார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறி­யி­ருந்தார்.
அது­போலத் தான் ஆனை­யி­றவில் அஞ்­சலி செலுத்­தி­யதை கோத்­தா­பய ராஜ­பக் ஷ தவ­றெனச் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். அர­சாங்கம் கூறும் பொது­வான இடம், நிச்­ச­ய­மாக வடக்கு, - கிழக்­குக்கு வெளியே தான் இருக்கும்.
ஆனால் போர் நடந்­ததும் போரால் பெரு­ம­ளவு மக்கள் கொல்­லப்­பட்­டதும் வடக்கு, கிழக்கில் தான். அப்­ப­டி­யி­ருக்கும் போது, அதற்கு வெளியே அஞ்­சலி செலுத்­து­வது எப்­படி முறை­யாகும் என்ற கேள்வி எழும்.
ஆனை­யி­ற­விலும், முள்­ளி­வாய்க்­கா­லி லும் வெளி­நாட்டுப் பிர­தி­நி­திகள் அஞ்­சலி செலுத்­து­வதை தவ­றெனச் சுட்­டிக்­காட்டும் அர­சாங்­கமே, அந்த இடங்­களில் தமது போர் வெற்­றிச்­சின்­னங்­களை நிறு­வி­யுள்­ளது என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.
அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வ­ரையில், தம்­மையும் மீறி எவரும் புலி­க­ளுக்கு அஞ்­சலி செலுத்தி விடக் கூடாது என்­பதில் உறுதியாக உள்ளது.
அதனால் தான், வரும் 27ஆம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படுவதால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைக் கூட அரசாங்கம் மூடியுள்ளது.
கடந்த ஆண்டு மாவீரர் நாளில் பல்க லைக்கழகத்தில் மாணவர்கள் தீபமேற்றிய போது படையினரும் பொலிஸாரும் நடத் திய தாக்குதல் கடும் கண்டனங்களை ஏற்படுத்தியிருந்தது.
அதுபோன்று இம்முறை நடப்பதை தடுக்கவே பல்கலைக்கழகத்தை இழுத்து மூடியுள்ளது அரசாங்கம்.
எவ்வாறாயினும் நவநீதம்பிள்ளையை அஞ்சலி செலுத்த அனுமதித்திருந்தாலோ, கனேடியப் பிரதிநிதியின் அஞ்சலியை சர்ச்சைக்குரியதாக்காமல் விட்டிருந்தாலோ இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை பறிக்கும் அரசாங்கத்தின் செயல் இந்தள வுக்கு வெளிப்பட்டிருக்காது.
அரசாங்கத்தின் இறுக்கமான போக் குத் தான் வடக்கிலுள்ள மக்களுக்கு இறந்து போனவர்களை நினைவு கூரும் உரிமையைக் கூட அரசாங்கம் கொடுக்கவில்லை என்ற உண்மையை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது.-
சுபத்ரா

0 கருத்துக்கள் :