நடிகர் அகஸ்டின் மருத்துவமனையில் மரணம்

15.11.13

மலையாள படவுலகில் நகைச்சுவை நடிகராக பிரபலமான அகஸ்டின் கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் மருத்துவமனை ஒன்றில் இன்று மரணம் அடைந்தார்.  அவருக்கு வயது 58.  கடந்த 2010ம் ஆண்டு முதல் அவரது உடல்நலம் பாதிப்பு அடைந்ததை தொடர்ந்து நடிப்பதை நிறுத்தி கொண்டார்.
இவர் சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.  கடைசியாக ஜாய் மாத்யூ இயக்கத்தில் வெளியான ஷட்டர் என்ற படத்தில் லால் மற்றும் ஸ்ரீனிவாசன் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.
ராவண பிரபு, தேவசுரம், கதபறயும்போல், ஆரம் தம்புரான், சிந்தாவிஷ்டயா சியாமளா மற்றும் நந்தனம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.  இவருக்கு இரு மகள்கள்.  அவர்களில் ஒருவர் பிரபல நடிகை ஆன் அகஸ்டின்.  மற்றொருவர் ஜீத்து ஆவார்.

0 கருத்துக்கள் :