முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு மீண்டும் சுற்றுச்சுவர்

22.11.13

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றச் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலைத்துறை சொத்தை சேதப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பழ.நெடுமாறன் உள்பட 83 பேருக்கு மதுரை உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது.

இந்த நிலையில், திருச்சி மத்திய சிறையில் இருந்து இன்று காலை 9.05 மணிக்கு பழ.நெடுமாறன் உள்பட 83 பேர் விடுதலையானார்கள்.
செய்தியாளர்களிடம் பேசிய பழ.நெடுமாறன்,
இலங்கையில் தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய பிரிட்டன் பிரதமருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கட்டப்பட்டதில் விதிமீறல் இல்லை எனினும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றச் சுற்றுச்சுவரை இடித்ததும் சட்டவிரோமானது.

மேலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றச் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பழ.நெடுமாறன் மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :