ஒரு சிறுமியின் அழுகுரல் கண்ணீர்மல்க காத்திருந்த மக்கள் மீது சிங்களத்தின் காட்டுமிரண்டித்தனம் !

15.11.13

அனைத்துலககத்தின் பிரச்சன்னத்தை வெளியேற்றி விட்டு சாட்சியமற்ற போரினை தமிழர்கள் மீது நடத்திய சிங்களம், தற்போது அனைத்துலகத்தின் பிரச்சனத்தின் முன்னேயே தமிழர்கள் மீதான காட்டுமிரண்டாட்டித்தனத்தை யாழ் மண்ணில் காட்டியுள்ளது.


யாழ்குடாவுக்கு வந்திறங்கிய பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமறூன் அவர்க,ள் யாழ் பொதுநுலகத்தில் வட மாகாணசபை முதல்வரை சந்தித்துக் கொண்டிருந்தவேளை, வெளியே கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டிருந்த காணாமல் போனோரது உறவுகளினால் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை சிறிலங்காவின் கலகம் அடக்கும் காவல்துறை மேற்கொண்டுள்ளது.


வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் உட்பட சிறுவர் முதல் முதியோர் வரை கூடியிருந்த பெண்கள் மீது சிங்களம் இக்காட்டுமிரண்டித்தனத்தினை ஏவிவிட்டுள்ளது. 

0 கருத்துக்கள் :