போர்க்குற்றம் தொடர்பில் மேலும் காணொளிகள் தயாரிப்பேன்:கெலும் மக்ரே

12.11.13

அரசாங்கப் படையினர் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் சாட்சியங்கள் இருந்தால் மேலும் காணொளிகள் தயாரிக்கப்படும் என சனல்-4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் கெலும் மக்ரே தெரிவித்துள்ளார்.

எனினும், அவ்வாறான சந்தர்ப்பம் கிடைக்குமா என்பதனை கூற முடியாது. போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும்.
ஊடகவியலாளர் என்ற ரீதியில் கடமைகளை மேற்கொண்டு வருவதாக மக்ரே தெரிவித்துள்ளார்.
கொலைக்களம், போர் சூன்ய வலயம் உள்ளிட்ட சில காணொளிகளை மக்ரே வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“ஐக்கியத்துக்கான சக்தி” எனும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பான அமைப்பு ஜாதிக சேவா சங்கம் தனது தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :