நபிகள் நாயகத்தை அவமதிக்கும் டுவிட்: நபருக்கு 5 வருட சிறை

19.11.13

சமூகவலைத்தளங்களால் நமக்கு பல்வேறு நன்மைகள் உள்ள போதிலும் அவற்றை சரியான முறையில் பயன்படுத்த தெரிந்திருத்தல் அவசியமாகின்றது.

அவற்றை ஒழுங்கான முறையில் கையாளத் தெரியாமல் சிக்கலில் சிக்கியோர் பலர்.
குறிப்பாக சமூகவலைத்தளங்களில் தெரிவிக்கும் கருத்துக்கள் மற்றைய ஊடகங்களை விட மிக வேகமாக பரவுவதுடன், பின்னூட்டல்களையும் பெற்றுக்கொள்கின்றது.

சமூகவலைத்தளங்களில் வெளியிடப்படும் சில தனிப்பட்ட அபிப்பிராயங்கள் நம்மை சிக்கலில் கொண்டு விடுவதற்கு உதாரணமாக கூறக்கூடிய சம்பவமொன்று குவைட்டில் இடம்பெற்றுள்ளது.

ஆம், குவைட்டைச் சேர்ந்த இளைஞரொருவர் நபிகள் நாயகம் தொடர்பில் டுவிட்டரில் வெளியிட்ட கருத்தொன்று அவருக்கு சிறைத்தண்டனையை பெற்றுக்கொடுத்துள்ளது.

முசாப் சம்சா என்ற இளைஞன் நபிகள் நாயகத்தின் உறவினர்கள் தொடர்பில் வெளியிட்ட டுவிட்டானது அவருக்கு 5 வருட சிறைத் தண்டனையை பெற்றுக்கொடுத்துள்ளது.

இறை நிந்தனை, மதத்தை அவமதித்தமை போன்ற காரணங்களை சுட்டிக்காட்டியே அவருக்கு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மேமாதம் அவர் மேற்படி டுவிட்டை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இத்தண்டனை தொடர்பில் அவர் மேன்முறையீடு செய்யவுள்ளார்

0 கருத்துக்கள் :