சனல் 4 தொலைக்காட்சி புலம்பெயர்ந்தோரின் ஏஜன்ட் - அஸ்வர்

16.11.13

இன்று இலங்­கையில் மனித உரி­மைகள் மீறப்­பட்­டு­வ­ரு­வ­தாக குற்றம் சுமத்தும் சனல் - 4 தொலைக்­காட்சி தமிழ் ஈழ­வி­டு­தலைப் புலிகள் நடத்­திய அரா­ஜ­கங்­களின் போது எங்­கி­ருந்­தார்கள். இத்­தொ­லைக்­காட்­சியைச் சேர்ந்­த­வர்கள் புலம்­பெ­யர்ந்த தமி­ழர்­களின் ஏஜன்ட்­டுகள், அதனால் அவர்கள் இங்­கி­ருந்து வெளி­யேற்­றப்­பட வேண்­டு­மென பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், ஊடக கண்­கா­ணிப்பு எம்.பியு­மான ஏ.எச்.எம். அஸ்வர் தெரி­வித்தார்.


நேற்று பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் ஊடக மத்­திய நிலை­யத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் கேள்வி நேரத்­தின்­போது சனல் - 4 தொலைக்­காட்சி தொடர்­பாக கேள்­வி­யெ­ழுப்­பி­ய­போதே மேற்­கண்­ட­வாறு வேண்­டு­கோள்­வி­டுத்தார்.


பொது­ந­ல­வாய அமைப்பின் அமர்­வுகள் தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்­து­மு­க­மாக நடை­பெற்ற மேற்­கு­றிப்­பிட்ட மாநாட்டில் பொது­ந­ல­வாய அ ைமப்பின் பேச்­சாளர் ரிச்சர்ட் உக்­குவும், இணைப்­பேச்­சாளர் அநு­ராதா ஹேரத்தும் கலந்­து­கொண்­டனர்.


சனல் - 4 இன் சார்பில் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்­து­கொண்ட ஊட­க­வி­ய­லா­ளர்கள் கெலும் மக் ேர, ஜொனதன் மில்லர் என்போர் இலங்­கையில் நடை­பெற்­றுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்­தத்­தின்­போது காணா­மற்­போ­யுள்ள ஆயி­ரக்­க­ணக்­கானோர் தொடர்­பாக பொது­ந­ல­வாய அரச தலை­வர்­களின் மாநாட்டில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டதா என்று கேள்வி எழுப்­பி­ய­துடன்,


கடந்த சில நாட்­க­ளாக தாம் புல­னாய்வுத் துறை­யி­னரால் கண்­கா­ணிக்­கப்­பட்­டு­வ­ரு­வ­தா­கவும், தாம் செல்­லு­மி­ட­மெல்லாம் புல­னாய்வுப் பிரி­வினர் தொடர்­வ­தா­கவும் தெரி­வித்­தனர். ஜனா­தி­பதி நடத்­த­வி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் மாநாடு ஏன் நிறுத்­தப்­பட்­டது. ஜனா­தி­பதி எமது கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்க விரும்­ப­வில்­லையா என்று கேள்வி எழுப்­பி­னார்கள்.


இத­னை­ய­டுத்து உணர்ச்­சி­வ­சப்­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நான் சிவில் சமூ­கத்தைச் சேர்ந்த ஒருவன் என்று தன்னை அறி­மு­கப்­ப­டுத்திக் கொண்­டதன் பின்பே மிக உரத்த குரலில் மேற்­கண்­ட­வாறு கூறினார்.


தொடர்ந்தும் அங்கு அவர் கருத்து தெரி­விக்­கையில், மனித உரிமை மீறல்கள் பற்றி இங்கு பிரஸ்­தா­பிப்­ப­வர்கள் யாரினால் அதி­க­மாக மனித உரிமை மீறப்­பட்­டது என்­பதை அறிந்­து­கொள்ள வேண்டும். இலங்­கையில் விடு­தலைப் புலி­களே மனித உரிமை மீறல்­களில் அதி­க­மாக ஈடு­பட்­டுள்­ளார்கள். வடக்­கி­லி­ருந்து சுமார் 75 ஆயிரம் முஸ்­லிம்கள் பலாத்­கா­ர­மாக விடு­த­லைப்­பு­லி­களால் வெளி­யேற்­றப்­பட்­டார்கள்.

கெப்­பித்­தி­கொல்­லா­வையில் பாட­சா­லைக்குச் சென்று கொண்­டி­ருந்த மாண­வர்கள் துண்­டு­துண்­டாக வெட்டிக் கொலை செய்­யப்­பட்­டார்கள். இந்த மனித உரிமை மீறல்கள், அரா­ஜகம் நடந்­த­போது சனல் - 4 தொலைக்­காட்சி எங்­கி­ருந்­தது. இலங்கை ரூப­வா­ஹினி கூட்­டுத்­தா­ப­னத்தில் கட­மை­யாற்­றிய தமிழ் பெண் ஒருவர் வெள்­ள­வத்­தையில் அவ­ரது கண­வ­ருடன் சேர்த்து விடு­தலைப் புலி­க­ளினால் கோர­மாக கொலை செய்­யப்­பட்டார். விடு­த­லைப்­பு­லிகள் சிறு­வர்­களை தமது படையில் இணைத்து யுத்­தத்தை தொடர்ந்து நடத்­தி­யது. சனல் - 4 இவை­களை மறந்­து­விட்­டதா? பொது­ந­ல­வாய அமைப்பு இவற்றை கவ­னத்­திற்­கொள்ள வேண்டும்.

இது ஒரு ஜன­நா­யக நாடு. இத­னா­லேயே சனல் - 4 தொலை­க்­காட்­சிக்கு வரு­கை­தர இலங்கை அனு­மதி வழங்­கி­யது. எமது ஜனா­தி­பதி எதிர்­வரும் இரு வரு­டங்­க­ளுக்கு பொது­ந­ல­வாய அமைப்பின் தலை­மைத்­து­வத்தை ஏற்பார்.

காத்­தான்­கு­டியில் நூற்­றுக்கும் மேற்­பட்ட முஸ்­லிம்கள் பள்­ளி­வா­சலில் படு­கொலை செய்­யப்­பட்­டனர். இவைகள் மனித உரிமை மீறல்கள் இல்­லையா? என்று தொடர்ந்து ஏ.எச்.எம். அஸ்வர் சப்­த­மிட்டு பேசினார். அரு­கி­லி­ருந்த சில ஊட­க­வி­ய­லா­ளர்கள் அவரை அமை­திப்­ப­டுத்த முயற்­சித்தும் முடி­யா­மற்­போ­னது.


ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டுக்கு தலைமை வகித்த ரிச்சார்ட் உக்கு மாநாட்டில் தனி நபர் ஒழுக்­காற்றைப் பின்­பற்­று­மாறு வேண்டிக் கொண்டும் அஸ்வர் தனது உரையை நிறுத்திக் கொள்­ள­வில்லை.


பல தட­வைகள் வேண்­டிக்­கொண்­டதன் பின்பே அஸ்வர் அமை­தி­ய­டைந்து தனது உரையை நிறுத்திக் கொண்டார். ஆங்­கி­லத்தில் உரை­யாற்­றிய அஸ்வர் சில வார்த்­தைகள் சிங்­க­ளத்­திலும் பேசினார்.


ஒரு யுத்த நிலை­மையின் போது இவ்­வா­றான சம்­ப­வங்கள் நடை­பெ­று­வது இயல்பு. இச் சம்­ப­வங்­களை வைத்து தொலைக்­காட்சி ஊட­க­வி­ய­லா­ளர்­களை வெளி­யேற்­றும்­படி தெரி­விப்­பது முறை­யா­ன­தல்ல எனத் தெரி­வித்தார்.

0 கருத்துக்கள் :