இசைப்பிரியா படுகொலை. புதிய ஆதாரம் வெளியிட்டுள்ளது சனல்-4 (காணொளி)

1.11.13

படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் சிங்களப் படைகளால் இசைப்பிரியா அவர்கள் உயிருடன் இழுத்துச் செல்லப்படும் காணொளி ஆதாரத்தை சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

 பொதுநலவாய மாநாடு நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில் இக் காணொளி ஆதாரத்தை இன்று சனல்-4 தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.

 இசைப்பிரியாவை தமிழீழத் தேசியத் தலைவரின் புதல்வி துவாரகா என்று கருதி சிங்களப் படையினர் இழுத்துச் செல்லும் பொழுது தான் துவாரகா இல்லை என்று அவ்விடத்தில் அழுதபடியே இசைப்பிரியா கூறும் ஒலிப்பதிவும் இக்காணொளியில் உள்ளது. இக்காணொளி அனைத்து தமிழ் உறவுகளையும், கவலைகொள்ளவும். மிக சினம்கொள்ளவும் வைத்துள்ளது.


0 கருத்துக்கள் :