3 நாட்கள் நடைபெற்ற காமன்வெல்த் மாநாடு முடிவடைந்தது

17.11.13

காமன்வெல்த் நாடுகள் அமைப்பின் 3 நாள் மாநாடு, இலங்கை தலைநகர் கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.

ஞாயிற்றுக்கிழமை நடந்த காமன்வெல்த் மாநாட்டின் இறுதியில் 24 பக்க கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், இலங்கை இறுதி கட்ட போரில் நடந்த மனித உரிமைகள் மீறல் குறித்து நேரடியாக குறிப்பிடாமல், ‘‘மனித உரிமைகள் அமலாக்கத்தை வலுப்படுத்த துரிதமான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்’’ என்று உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்தின் பிரிக்க முடியாத அங்கமாக வளர்ச்சிக்கான உரிமையை அங்கீகரிப்பது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை என்றும், உள்நாட்டிலும் நாடுகளுக்கு இடையேயும் எந்த வடிவத்தில் பயங்கரவாதம் தலைதூக்கினாலும் அதை ஒடுக்குவதற்கு மீண்டும் உறுதி பூணுவது என்றும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

காமன்வெல்த் மாநாட்டை நடத்திய இலங்கை அதிபர் ராஜபக்சே, கூட்டறிக்கையை விளக்கி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட மாநாட்டில் கையெழுத்தான பல்வேறு ஒப்பந்தங்கள் பற்றி விவரித்தார்.

0 கருத்துக்கள் :