பொதுநலவாயநிதி ஒதுக்கீடுகளை நிறுத்தப்போவதாக கனடா எச்சரிக்கை

8.10.13

பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கான நிதி ஒதுக்கீடுகளை நிறுத்தப் போவதாக கனடா அச்சுறுத்தல் விடுத்துள்ளது.
இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடத்தப்படுவதனை கனடா எதிர்த்து வரும் நிலையில், நிதி உதவிகளையும் நிறுத்திக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் மனித உரிமை நிலைமகள் குறித்து திருப்தி அடைய முடியாது என கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் தெரிவித்துள்ளார்.
எனவே கொழும்பில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.
தற்போது பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்விற்காக வழங்கப்பட்டு வரும் உதவி தொகைகளையும் ரத்து செய்யப் போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கான நிதி வழங்கும் பிரதான நாடுகளில் கனடா முக்கிய இடம் வகிக்கின்றது.
வருடாந்தம் கனடா 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியை உதவியாக வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கனடா மாநாட்டை புறக்கணிக்கும் என எதிர்பார்த்ததாகவும் இந்தத் தீர்மானம் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை எனவும் அந்நாட்டுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சித்ரா வாகீஸ்வரா தெரிவித்துள்ளார்.
ஏனைய அனைத்து நாடுகளினதும் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :