மாநாட்டை புறக்கணிக்க​வேண்டும் என்ற BTF வின் போராட்டம்

11.10.13

நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பிரித்தானியப் பிரதமர் கமரூன், இளவரசர் சார்ல்ஸ் ஆகியோரை கலந்து கொள்ள வேண்டாமென்று, அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுபினர்களை, அந்தந்தத் தொகுதி மக்களின் கையெழுத்துக்களுடன் சந்தித்து, பிரதமருக்கு அழுத்தத்தினை பிரயோகிக்குமாறு வேண்டிக் கொள்ளும் பிரித்தானியத் தமிழர் பேரவைன் போராட்டம் மக்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தொழிற்கட்சியைச் சேர்ந்த Hayes and Harlington தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் John McDonnell மற்றும் Tooting தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் Sadiq Khan அவர்களுடனான சந்திப்புக்கள் கடந்த சில நாட்கள் முன்பு நடைபெற்றன. இச்சந்திப்பில், கருத்துரைத்த திரு.McDonnell இலங்கைக்கு சென்று, தமிழ் மக்கள் மேல் பல கொடூரங்களை நிறைவேற்றிய, ராஜபக்சேயுடன் பிரதமர் கமரூன், கை குலுக்கி , மாநாட்டில் கலந்து கொண்டு, இனவெறி இலங்கையரசை அங்கீகரிப்பதை நிறுத்த வேண்டுமென்று வலியுறுத்தினார், பிரித்தானிய தமிழர் பேரவையுடன் இணைந்து ஆர்வமுள்ள தமிழின செயற்பட்டாளர்கள், மேலும் பல பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க முயற்சி செய்ய வேண்டுமென்றும், இப்படியான எங்களின் அரசியல் முன்னகர்வுகளுக்கு, தோள் கொடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறது


0 கருத்துக்கள் :