பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஈழத்தமிழ்ப் பெண்

21.10.13

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் பிரிட்டன் தொழிற்கட்சியின் சார்பில் உமா குமரன் என்ற இலங்கைத் தமிழ்ப் பெண் போட்டியிடவுள்ளார் என பிரிட்டன் செய்திகள் தெரிவிக்கின்றன.
உமா குமரனின் பெற்றோர் இலங்கையில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரினால், லண்டனுக்கு குடிபெயர்ந்தனர் என்பது குறிப்பிடதக்கது.லண்டனில் பிறந்த உமா குமரன், ஹரோ தொகுதியில் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி சார்பில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
தமிழ், சிங்களம், ஆங்கிலம், பிரெஞ்சு , ஜேர்மன் ஆகிய ஐந்து மொழிகளைப் பேசும் திறன் பெற்றவர் உமா குமரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :