பாக். முன்னாள் ஜனாதிபதி முஷாரப் மீண்டும் கைது

10.10.13

பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பர்வேஷ் முஸாரப் ஜனாதிபதியாக இருந்தவேளையில் 2007 ஆம் ஆண்டு இஸ்லாமாபாத் நடைபெற்ற பள்ளிவாசல் மீதான முற்றுகையொன்றினால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானமைக்கு  முஷாரப் பொறுப்பேற்க வேண்டுமென குற்றம்சுமத்தப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேறு மூன்று வழக்குகளில் அவருக்கு நேற்று புதன்கிழமை பிணை வழங்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :