நழுவினாராம் சல்மான் குர்ஷித் – கெஹலிய ரம்புக்வெல தகவல்

11.10.13

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத் தெரிவுக்குழு குறித்துப் பேசியபோது, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், அதுபற்றி அதிகம் பேசாமல் நழுவி விட்டதாக, கூறியுள்ளார் சிறிலங்கா அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“தேசியப் பிரச்சினைக்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு முலமே தீர்வு காண முடியும் என்ற சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துடனான சந்திப்பின் போதும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, இதனை வலியுறுத்தியிருந்தார்.

ஆனால், இந்திய வெளிவிவகார அமைச்சர் இது தொடர்பாக, அதிகம் பேசாமல் ஓரிரு வார்த்தைகளுடன் நழுவிவிட்டார்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்

0 கருத்துக்கள் :